பருவநிலை மாற்ற நெருக்கடி தீவிரமடைவதால், நிலயான வாழ்க்கைமுறையினை அனைத்து மட்டத்திலும் பின்பற்றுவது ஒரு தேர்வு மட்டுமல்ல - இது ஒரு தவிர்க்க கூடாத உலகளாவிய பொறுப்பு.
புதுமையான முன்னோக்கிய சிந்தனைகளே, இந்த கிரகத்தில் மனித முன்னேற்றத்தையும் தொடர்ந்து வாழும் ஆரோக்கியத்துடன் தக்கவைத்து மனிதகுல எதிர்காலத்தை வடிவமைக்கிறது.
இதனை நோக்கிய பாதையில் கீழ்கண்ட செயல்பாடு முக்கிய பங்கு ஆற்றும்.
🍩 டொனெட் எகனாமிக்ஸ் ( Doughnut Economics): மனிதனின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதே வேளையில் நாம் வாழும் கிரக்தின் எல்லைகளை ( Planetary Boundaries ) மீறாது பொறுப்புடன் அதை மதித்து ஒரு நிலையான பொருளாதார வளர்ச்சியினை நோக்கி செலுத்திடும். ( 9 எல்லைகளில் 6 மீறிவிட்டோம்)
*🌱 🪱🌳இயற்கை அடிப்படையிலான தீர்வுகள் ( Nature Based Solutions)* சுற்றுச்சூழலில் உள்ள இயற்கை மற்றும் உயிரியல் அமைப்புகளின் ஆற்றலைப் பயன்படுத்தி, பல்லுயிர் பெருக்கத்தை மீட்டெடுத்து அதன் உதவியுடன் காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு சமூக பின்னடைவை சரிசெய்கின்றது.
*♻️ வட்ட பொருளாதாரம் Cradle to cradle Circular Economy*: தொட்டில் இருந்து தொட்டில் வளத்தின் செயல்திறன் மேம்பாட்டு அணுகுமுறையினை உற்பத்தியில் கடைபிடிப்பதன் மூலம் உற்பத்தி பொருளின் வாழ்க்கை பலனை நீட்டிப்பதனால் கழிவுகளை குறைத்து வட்ட பொருளாதாரத்தினை உருவாக்குகிடும்.
*🌿 சுற்றுச்சூழல் சேவைகள் Ecosystem Services*: இதுவரை பொருளாதார மதிப்பீடு செய்யாது மனிதர்கள் அனுபவித்து வரும் , சுத்தமான காற்று, நீர் மற்றும் காலநிலை ஒழுங்குமுறை ஆகிய சேவைகளை தரும் இயற்கை வளங்களை இனி நிலையான பொருளாதார கண்ணோட்டத்தில் அதனை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை இனி முன்னிறுத்திடும்.
*💡 ஒருங்கிணைந்த மூலதனம் Integerated Capital*: இயற்கை சூழியல் வளம், சமூகம் மற்றும் மனிதவளம் ஆகியவை நீடித்த நிலையான வளர்ச்சிக்கான ஒருங்கிணந்த மூலதனமாக பார்த்திடும் சிந்தனை.
*🔍 வாழ்க்கை சுழற்சி மதிப்பீடு Life Cycle Assessment*:
உற்பத்தியான பொருள் தனது வாழ்நாள் முழுவதும் ஆக்கிய செலவினையும் கணக்கிடுதல் சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைத்து, சமூகம் பசுமையான தீர்வுகளை தந்திடும் பொருள் உற்பத்தி தொழில்களுக்கு ஆதரிப்பும் அதிகாரமும் அளித்திடும்.
இந்த கொள்கைகளை ஏற்றுக்கொள்வதன் மூலம், வணிகங்களும் சமூகங்களும் அடுத்த தலைமுறைகளுக்கு நிலையான முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும்.
#நிலைத்தன்மை #காலநிலை நடவடிக்கை #பசுமைப் பொருளாதாரம்
No comments:
Post a Comment