26/01/2015

மூன்றெழுத்து

நம்ம மொழி செம்மொழி.
#அம்மா மூன்றெழுத்து
#அப்பா மூன்றெழுத்து
#தம்பி மூன்றெழுத்து
#அக்கா மூன்றெழுத்து
#தங்கை மூன்றெழுத்து
#மகன் மூன்றெழுத்து
#மகள் மூன்றெழுத்து
#காதலி மூன்றெழுத்து
#மனைவி மூன்றெழுத்து
#தாத்தா மூன்றெழுத்து
#பாட்டி மூன்றெழுத்து
இவையனைத்தும் அடங்கிய
#உறவு மூன்றெழுத்து
உறவில் மேம்படும்
# பாசம் மூன்றெழுத்து
பாசத்தில் விளையும்
#அன்பு மூன்றெழுத்து
அன்பில் வழியும்
#காதல் மூன்றெழுத்து
காதலில் வரும்
#வெற்றி மூன்றெழுத்து
#தோல்வி யும் மூன்றெழுத்து
காதல் தரும் வலியால்வரும்
#வேதனை மூன்றெழுத்து வேதனையின் உச்சகட்டத்தால் வரும்
#சாதல் மூன்றெழுத்து
சாதலில் பறிபோகும்
#உயிர் மூன்றெழுத்து..
இது நான் எழுதிய
#கவிதை என்றால் மூன்றெழுத்து..
இது
#அருமை என்றால் அதுவும்
மூன்றெழுத்து
#மொக்கை என்றால் அதுவும்
மூன்றெழுத்தே..
#நட்பு என்ற மூன்றெழுத்தால்
இணைந்து இதைப்படித்த அனைவருக்கும் என்
#நன்றி ..
#நன்றி யும் மூன்றெழுத்தே ...!
#மூன்று ம்
மூன்றெழுத்தே........!!!
#இவை அத்துனையும் உள்ளடக்கிய தமிழ் உம் மூன்றெழுத்து...!!

சிறந்த 25 பொன்மொழிகள்

1. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம்
சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த
பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.

2. கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம்
வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

3. ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

4. மகிழ்ச்சி என்ற உணர்ச்சி மட்டும் இல்லாவிட்டால்
வாழ்க்கை என்பது சுமக்க முடியாத பெரிய சுமையாகியிருக்கும்.

5. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.

6. நம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற
கொள்கையை மேற்கொள்கிறான்.

7. அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.
அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.

8. சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச்
செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.

9. எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம்
இருக்கிறது என்பதே முக்கியம்.

10. அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான்.

11. முன்நோக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.

12.ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.

13. எல்லோரையும் நம்புவது அபாயகரமானது.
ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.

14. எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.
ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.

15. எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ
சீர்திருத்த முயலுகிறார்கள்.

16. நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

17. செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும்
உதவி செய்யாது.

18. சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட, என்றும்
சண்டையே இல்லாத சமாதானம்தான் வேண்டும்.

19. நேற்றைய பொழுதும் நிஜமில்லை; நாளைய பொழுதும் நிச்சயமில்லை; இன்றைக்கு மட்டுமே நம் கையில்.

20. மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.

21. பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.

22. வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி, அழகான பசி. ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.

23. நீங்கள் விரும்புவது ஒருவேளை உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்கு தகுதியானது உங்களுக்கு
கண்டிப்பாக கிடைத்தே தீரும்.

24. அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து.
அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும்
அகன்றுவிடும்.

25.தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.

04/01/2015

8 மணி நேரம்

டாக்டர்: கணவன் உடம்பை சோதித்துவிட்டு "இன்னும் 8 மணி நேரம் தான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள், அதற்குள் உங்களுக்கு பிடித்தமான விஷயங்கள் எல்லாத்தையும் செஞ்சிக்குங்க...."

மாலை 5 மணி : கண்ணீர் மல்க விஷயத்தை மனைவியிடம் பகிர்ந்தான் கணவன். துடித்தாள் அவள்.

கணவன்: எனக்கு உன் கையால வெங்காய தோசையும், கெட்டி சட்னியும் செஞ்சி குடும்மா இன்னும் 7 மணி நேரம் தான் பாக்கியிருக்கு.

மாலை 7 மணி : ராத்திரி சாப்பாட்டுக்கு மீன் குழம்பு வச்சி குடும்மா, இன்னும் 5 மணி நேரம் தான் நான் இருப்பேன்...

இரவு 10 மணி : நல்ல பசும்பாலில் உங்கையால சொஞ்சமா சக்கர போட்டு எனக்கு குடும்மா..இன்னும் மூணு மணி நேரம் தான் இருக்கு....!!!

இரவு 12 மணி : தூங்கும் மனைவியை எழுப்புகிறான்.
மனைவி : பேசாம படுங்க...காலைல எழுந்தவுடன் ஆயிரம் வேல இருக்கு. சொந்தகாரங்களுக்கு சொல்லி அனுப்பனும், ஐயருக்கு ஏற்பாடு பண்ணனும், சுடுகாட்ல புக் பண்ணனும்.....

உங்களுக்கு காலைல எழுந்திருக்கிற வேலை கூட இல்ல.....!!

கணவன்: ???????!!!!!

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்

பாலைவனத்தில் பயணம்
செய்து கொண்டிருந்த ஒருவன் குடிக்கத்
தண்ணீர் இல்லாமல் மயங்கி விழும்
நிலைக்கு வந்து விட்டான். தாகத்தால்
உயிர் போய்விடுமோ என்று நினைத்த
போது தூரத்தில் ஒரு குடிசை போல
ஏதோ ஒன்று தெரிந்தது.

மிகவும் கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான். அங்கே ஒரு
கையால் அடித்து இயக்கும் பம்ப்பும், அதன் அருகில் ஒரு ஜக்கில் தண்ணீரும்
இருந்தன.
ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். "ஜக்கில்
உள்ள தண்ணீரை அந்தப் பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும்.
குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச்
செல்லவும்."...
அந்தப் பம்ப்போ மிகவும் பழையதாக இருந்தது. அது இயங்குமா, தண்ணீர்
வருமா என்பது சந்தேகமாக இருந்தது.
அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர்
பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.
அவன் யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது.

ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்தப் பம்பு இயங்குவதாக இருந்து
அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால், இனி தன்னைப்
போலத் தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போகத் தானே காரணமாகி
விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது.
அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை.
ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்தத்
தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க
ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது.
தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரையும் நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனமும் நிறைந்திருந்தது.

நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல
பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று
விடலாகாது.
இந்தக் காலக் கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த
நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால்
நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது.
"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற மனநிலையில்
ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம்
இன்பமயமாகி விடுமல்லவா?
இது போல் தாங்களும் செய்ய முடிவிருந்தால் மட்டும் பகிருங்கள