19/08/2019

நடப்பு, நாம், அரசு

👉🏽எந்த குழந்தையும் அரசுப் பள்ளியில் சேர்ப்பது இல்லை ஆனால் அரசுப் பள்ளிகளை ஏன் மூடுகிறீர்கள் என்று போராட்டம்.

👉🏽மழைபெய்யும் காலங்களில் மழை நீரை சேமிப்பதற்கு எந்த முயற்சியும் எடுப்பதில்லை, அரசு கொண்டுவந்த மழைநீர் சேகரிப்பு திட்டங்களை வீடுகளில் ஒழுங்காக செயல்படுத்துவதில்லை. ஆனால் தண்ணீர் இல்லாத காலத்தில் அரசை மட்டும் குறை கூறுவது.

👉🏽இங்கு உள்ள அனைவரும் வசதிக்காக கார், பைக் வாகனங்கள் வாங்க வேண்டியது. ஆனால் பெட்ரோல் டீசல், கேஸ் போன்ற ஹைட்ரோகார்பன் எடுக்க கூடாது என்று போராடுவது.

👉🏽முப்பது வருடத்திற்கு முன்னால் ஒரே ஒரு டிவிஎஸ் 50 சிசி வண்டிகள் மட்டுமே வீட்டிற்கு இருந்தது. இப்போது கார், பைக் என வீட்டுக்கு வீடு பல வாகனங்கள், ஆனால் ரோடு போட கூடாது என்று போராடுவது.

👉🏽விவசாயப் பொருட்கள் விலை ஏறினால் அரசை குறை கூறுவது, தக்காளி எப்பவும் கிலோ 5 ரூபாய்க்கு கிடைக்க வேண்டும் என்று நினைப்பது. அதேசமயம் விவசாயிகளுக்கு ஆதரவு என்று ஒரு போராட்டம்.

👉🏽ஆங்கிலம் கலக்காமல், தமிழ் மொழியில் தொடர்ந்து நான்கு வாக்கியங்கள் பேச முடியவில்லை. ஆனால் மத்திய அரசு தமிழை அழிக்கிறது என்று ஒரு போராட்டம்

👉🏽 தரமான மருத்துவர்கள் இல்லை என்று ஒரு போராட்டம், தரமான மருத்துவர்களை உருவாக்குவதற்கு அரசு நுழைவுத்தேர்வு கொண்டு வந்தால் அதற்கு எதிரான ஒரு போராட்டம்

👉🏽 500 இன்ஜினியரிங் காலேஜ் களில் மாணவர்களைச் சேர்ப்பது. படித்து முடித்து வரும் இன்ஜினியர்கள் வேலை செய்ய தொழிற்சாலையை அமைக்க விடாமல் இடம் எடுப்பதற்கு எதிர்த்து போராடுவது.

👉🏽 சௌகரியத்திற்காக பிரிட்ஜ், கிரைண்டர், வாஷிங்மெஷின், ஏசி பயன்படுத்துவது. ஆனால் மின்சாரத்தை உருவாக்க பவர் பிளான்டை அமைக்க எதிர்த்துப் போராடுவது, மற்றும் மின்சாரம் கொண்டு வருவதற்கு மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவிப்பது.

இங்கு நடக்கும் அனைத்து பிரச்சனைக்கும் நாம் தான் காரணமென்று மக்கள் உணரும் வரை, யாரோ ஒருவர் சுயநலத்திற்காக தூண்டி விட்ட போராட்டத்தை, மக்களும் ஏன் போராட்டம், எதற்கு போராட்டம் என்று சிந்திக்காமல் இருந்தால், போராடிக் கொண்டே இருக்க வேண்டியது தான்.

04/08/2019

அமைதி-ஆனந்தம்… வாழ்க்கையின் துவக்கமா? முடிவா?

அமைதி-ஆனந்தம்… வாழ்க்கையின் துவக்கமா? முடிவா?
இன்று பலரும் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா? ஆன்மீகப் பாதையில் சென்று அமைதியை நாட வேண்டுமென்றால் ஏதாவதொரு மலையின் குகைக்குப் போய் உட்கார்ந்து கொள்ள வேண்டுமென்று நினைக்கிறார்கள். ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அமைதியாயிருக்க மலைக்குப் போகிறீர்கள் என்றால், மலை அமைதியாயிருப்பதாக அர்த்தமே தவிர நீங்கள் அமைதியாயிருப்பதாக அர்த்தமல்ல. இரைச்சல் மிகுந்த சந்தைக்கு நடுவிலும் அமைதியாயிருக்க முடிந்தால்தான், அந்த அமைதி உங்களுடையது என்று அர்த்தம்.

எனவே, வெளிச்சூழலில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தாலும் சரி, அதற்கும் உங்கள் ஆன்மீக வளர்ச்சிக்கான வாய்ப்புகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நீங்கள் ஒரு மேலாளராக இருக்கலாம், குடும்பத்தலைவியாக இருக்கலாம், கசாப்புக் கடைக்காரராகக் கூட இருக்கலாம். அந்த நிலையில் இருந்தபடியே ஆன்மீக வளர்ச்சிக்கு உள்நிலையில் தேவையானவற்றை நீங்கள் செய்து கொண்டிருக்கலாம். உங்கள் வெளிச்சூழலுக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஒருமுறை கௌதம புத்தர் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். பத்துப் பதினைந்து பேர் அவரை சூழ்ந்து கொண்டு கடுமையாக ஏசத் தொடங்கினார்கள். காது கொடுத்து கேட்க முடியாத அளவு கடுமையான வசவுச் சொற்கள். அனைத்தையும் புத்தர் கவனமாகக் காது கொடுத்துக் கேட்டார். அவர்கள் சொன்ன எதையும் அவர் புறக்கணிக்கவில்லை. முழு விழிப்புணர்வோடு எல்லாவற்றையும் கேட்டுவிட்டுப் பிறகு சொன்னார். “இன்று மாலை இதே வழியாகத்தான் வருவேன். நீங்கள் ஏதாவது சொல்ல வேண்டியிருந்தால் சொல்லலாம்”. இந்தத் தன்மையில் இருக்கிற மனிதரை உங்களால் என்ன செய்ய முடியும்? அச்சத்தின் காரணமாக புத்தர் அப்படி நடந்து கொள்ளவில்லை. அவர் குரல் கொடுத்தால் ஓடோடி வர ஆயிரம் பேர் ஆயத்தமாக இருக்கிறார்கள். ஆனால், தன் வாழ்க்கைமுறை இப்படித்தான் என்று அவர் தீர்மானித்துவிட்டார். அமைதியாகவும் ஆனந்தமாகவும் வாழ்வதென்பது அவர் எடுத்த முடிவு. நீங்கள் அவரை என்ன செய்தாலும் சரி, அமைதியையும் ஆனந்தத்தையும் விட்டுவிட்டு உங்கள் வழிக்கு அவர் திரும்ப மாட்டார். அறிவார்ந்த மனிதர் இப்படித்தானே இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் அப்படி இல்லை. யாராவது உங்களை ஒருபக்கம் பிடித்துத் தள்ளினால் தள்ளின பக்கம் போவீர்கள். இன்னொருவர் உங்களை ஒருபக்கம் இழுத்தால், இழுத்த இழுப்பிற்குச் செல்வீர்கள். அமைதியாகவும் ஆனந்தமாகவும் வாழ்வது என்று நீங்கள் தீர்மானித்ததாகத் தெரியவில்லை. அப்படித் தீர்மானித்திருந்தால் யாரோ, ஒரு முட்டாள் எதையாவது செய்தால், நீங்கள் பொருட்படுத்த மாட்டீர்கள். அமைதியாக இருப்பீர்கள். ஆனால் அப்படியா இருக்கிறீர்கள்? யாராவது ஒரு முட்டாள் எதையாவது செய்தால் அங்கேயே, அந்த இடத்திலேயே எதையாவது செய்து, அவரைவிடப் பெரிய முட்டாள் நீங்கள் என்று நிரூபிக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கையை நிறைவான முறையில் நடத்துவதென்பது உங்கள் கையில்தான் இருக்கிறது.

நீங்கள் ஒரு குழந்தையாக இருந்தபோது, மனஅமைதி உங்களுக்குள்ளேயே இருந்தது. அதை நீங்கள் வெளியில் தேடவேண்டி வந்ததில்லை. அப்போதும் வெளிச்சூழ்நிலைகள் பலவிதமாகப் போனதுண்டு. ஆனாலும் அமைதியில்லாமல் போகவில்லை. இடையில் ஏதோ நடந்தது. உங்கள் அமைதி காணாமல் போனது. இப்போதெல்லாம் அமைதி என்பது உங்களுக்கு இயல்பான விஷயமாக இல்லை. பிடித்து வைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. விட்டால் போய்விடும், இல்லையா? ஏன் இப்படி ஆனது? இந்தப் பிரபஞ்சம் என்பதே, ஒரே சக்தி தன்னை இலட்சக்கணக்கான விதங்களில் வெளிப்படுத்திக் கொள்வதுதான் என்பதை அறிவியல் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபித்துள்ளது. ஒரு சக்தி பேசுகிறது. இன்னொரு சக்தி கேட்கிறது. ஒரு சக்தி பாடுகிறது. ஒரு சக்தி ஆடுகிறது. உங்கள் சக்தி நிலையின் தன்மை அமைதியாக இருந்தால், நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள். இதே சக்தி அடுத்த விநாடி ஆவேசமானதாக மாறலாம். அதற்கடுத்த விநாடி ஆனந்தமானதாக மாறலாம். “நீங்கள்” என்று உங்களால் கருதப்படும் சக்தி நிலை வெவ்வேறு தன்மைகளை வெளிப்படுத்துவதை வாழ்க்கை நெடுகப் பார்த்திருப்பீர்கள். சில நேரங்களில் கோபம் கொள்கிறீர்கள். சில நேரங்களில் வெறுப்பை உமிழ்கிறீர்கள். சில நேரங்களில் அன்பைப் பொழிகிறீர்கள். சில நேரங்களில் ஆனந்தமாய் இருக்கிறீர்கள். உங்கள் சக்திநிலை ஏன் இத்தனை விதங்களாக மாறி மாறி வெளிப்படுகிறது? ஒரேயொரு காரணம்தான். உங்கள் வெளிச்சூழல் எப்படியிருக்கிறதோ அதற்கேற்ப நீங்கள் மாறுகிறீர்கள். வெளிச்சூழ்நிலை உங்களை ஆட்டுவிக்கிறது. அதற்கேற்ப நீங்கள் ஆடுவதற்கொரு காரணம் உண்டு. உங்கள் உடல், உங்கள் மனம், இரண்டுமே வெளிச்சூழலில் இருந்து நீங்கள் பெற்றவைதான். உங்கள் உடல், வெளியிலிருந்து நீங்கள் பெறுகிற உணவின் வார்ப்பு. உங்கள் மனம், வெளியிலிருந்து நீங்கள் பெறுகிற தகவல்களின் தொகுப்பு. ஆனால் உங்களுக்குள் இருக்கிற விஷயம் பற்றி நீங்கள் கவலைப்படுவதில்லை. இயேசுநாதர் எத்தனையோ விஷயங்களைச் சொன்னார். எத்தனையோ விஷயங்களைச் செய்தார். அவரைப் பல்லாயிரக்கணக்கானவர்கள் சூழ்ந்து கொண்டார்கள். கடைசியில் அவர் சொன்னார், “கடவுளின் ராஜ்ஜியம் உங்களுக்குள் இருக்கிறது” என்று. உங்களுக்குள் இருக்கிறது என்றால் உள்நோக்கிப் பார்க்க வேண்டும். உடலையும் மனதையும் அடிப்படையாகக் கொண்டு உங்களை நீங்கள் பார்க்க முடியாது. ஏனெனில் அவை உள்தன்மையின் அம்சங்கள் அல்ல. வெளியிலிருந்து நீங்கள் பெறுகிற அம்சங்கள். உங்களுக்குள் இருக்கிற கடவுளின் ராஜ்ஜியத்தை நீங்கள் இன்னும் கண்டறியாததன் காரணமே, உடல், மனம் என்கிற எல்லைகளுக்குள் நீங்கள் சிறைப்பட்டிருப்பதுதான். ஸ்தூலம் கடந்த ஒன்றை ஐம்புலன்களால் உணரவே முடியாது. எனவே ஸ்தூலம் கடந்த ஒன்றை அனுபவிக்க விரும்புவீர்களென்றால் ஐம்புலன்களின் எல்லைகளை நீங்கள் தாண்ட வேண்டும். இல்லையென்றால், புலன்களுடனேயே போராடிக் கொண்டிருப்பீர்கள்.

உங்கள் உள்தன்மையை ஒரு பழத்தோடு ஒப்பிடுவீர்களானால், உங்கள் ஸ்தூலம் என்பது மேலே இருக்கும் தோலைப் போன்றது. தோலில் ஒட்டியிருக்கும் ஒரு துளி இனிப்பையே பெரிதாக எண்ணுகிறீர்கள். அதைக் கடந்து போனால் ஒரு பழமே உங்களுக்காகக் காத்திருக்கிறது. உங்கள் உள்தன்மையை நீங்கள் உணரத் தொடங்குவீர்களானால், நிகரில்லாத ஆனந்தத்தில் நீங்கள் வாழமுடியும். எனக்குள் நான் உணர்கிற தன்மைக்கு விலையாக இந்த உலகையே தந்தால் கூட நான் ஒப்புக்கொள்ளமாட்டேன். அத்தகைய விலை மதிப்பில்லாத பொக்கிஷம் இது. இந்த நிலை ஒவ்வொரு மனிதனுக்கும் சாத்தியம். தன்னில் முழுமையாக மூழ்கி, பேரின்பத்தில் திளைத்து, அதேநேரம் வெளியுலகில் இயல்பாகவும் உறுதியாகவும் வாழ்வதற்கான சாத்தியம் ஒவ்வொருவருக்கும் உண்டு. அதற்கு, சிறிது சக்தியையும் கவனத்தையும் உள்நோக்கித் திருப்ப வேண்டும். இத்தனை காலமாய் உங்கள் கவனம், உங்கள் சக்தி, உங்கள் வாழ்க்கை அனைத்தும் வெளியுலகம் நோக்கியே செலுத்தப்பட்டு வந்திருக்கிறது. சிறிதளவு சக்தியையும் நேரத்தையும் உங்கள் உள்நிலை வளர்ச்சிக்காக செலவிட நீங்கள் தயாராக இருப்பீர்களென்றால், மகத்தான அற்புதங்கள் நிகழும். ஆனந்தத்தின் வெளிப்பாடாகவே நீங்கள் திகழ முடியும். அப்போது உங்கள் தன்மையே மாறிவிடுகிறது. வாழ்வில் நீங்கள் மேற்கொள்ளும் எந்த விளையாட்டையும் அதன் எல்லைவரை சென்று விளையாட முடியும். ஆனால் தோற்க மாட்டீர்கள். வாழ்க்கையை நீங்கள் விரும்பும் விதமாக அமைத்துக்கொள்ள முடியும். ஆனால் வாழ்க்கையால் உங்களை எதுவும் செய்ய முடியாது. அமைதியாகவும் ஆனந்தமாகவும் இருந்தால்தான் ஒரு மனிதனால் காரியமாற்ற முடியும். அந்தப் பரிமாணத்தை உள்நிலையிலிருந்து பராமரிக்காவிட்டால் வாழ்க்கையே ஒரு எதேச்சையான நிகழ்வாகிவிடுகிறது. உங்களைச் சுற்றியிருப்பவர்கள் மிக நல்ல மனிதர்களாக இருந்தால் நல்லதே நடக்கிறது. அவர்கள் உங்களுக்கு எதிராகத் திரும்பினால் எல்லாவற்றையும் இழந்து விடுகிறீர்கள். அதனால்தான் எல்லோரும், எப்போதும் மிக நல்ல மனிதர்களையே வாழ்வில் சந்திக்க விரும்புகிறார்கள். நீங்கள் மிக நல்ல தன்மையில் இருந்தால், எந்தவிதமான மனிதர்களை எப்போது சந்தித்தாலும், எல்லாச் சூழலிலும் நீங்கள் ஒரே மாதிரியாக வாழ முடியும். இன்னொருவரின் நல்ல குணங்களுக்கும், தகுதிகளுக்கும் நீங்கள் ஏன் அடிமைப்பட்டு வாழ வேண்டும்? எப்போதும் யாராவதொருவர் உங்களைப் புரிந்துகொள்ள வேண்டுமென்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள்? உலகத்தை நீங்கள் முழுமையாகப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டுமே தவிர உலகம் உங்களைப் புரிந்துகொள்ள வேண்டுமென்று ஏங்கக் கூடாது. அமைதி, அன்பு, நல்வாழ்வு போன்றவை பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான எண்ணம் இருக்கிறது. திருமணமாகாதவர்களுக்கான கிளப் ஒன்றில் முற்பகல் நேரத்தில் முதிய மனிதனொருவன் மது பருகிக்கொண்டிருந்தான். உலகம் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் புகைப்பிடித்துக் கொண்டும் மது அருந்திக் கொண்டும் இருந்த அந்த முதியவனைப் பார்த்து ஆச்சரியமடைந்த பெண்ணொருத்தி அருகே சென்று கேட்டாள். “காலை நேரத்தில் இப்படிக் குடித்துக் கொண்டும் புகைபிடித்துக் கொண்டும் இருக்கிறீர்களே, உங்கள் வாழ்வின் ரகசியம் என்ன?” என்று. அவன் சொன்னான், “இன்று நான் அருந்தும் ஐந்தாவது பாட்டில் விஸ்கி இது. நாள் முழுக்க புகைப்பிடிக்கிறேன். விரும்பியதைச் சாப்பிடுகிறேன் இதுதான் என் வாழ்க்கை ரகசியம்” என்று. “ஆச்சரியமாயிருக்கிறதே! உங்கள் வயதென்ன?” என்று கேட்ட போது அவன் பதில் சொன்னான், “22” என்று. எனவே, நன்றாக வாழ்வது என்பது பற்றி அவரவருக்கும் தனித்தனி அபிப்பிராயங்கள் உள்ளன. உண்மையில், ஒரு மனிதர் நன்றாக வாழ்கிறார் என்றால் அவர் அமைதியானவராக, ஆனந்தமானவராக, ஆரோக்கியமானவராக வாழ்கிறார் என்றுதான் பொருள். அமைதியாக வாழ்வது என்பதே இப்போது மகத்தானதொரு விஷயமாகிவிட்டது. தம்மை ஆன்மீகவாதிகள் என்று அழைத்துக் கொள்பவர்கள் கூட, அமைதிதான் வாழ்க்கையின் மிகப்பெரிய இலட்சியம் என்பது போல் பேசுகிறார்கள். அமைதி, வாழ்க்கையின் அடிப்படையான விஷயம். நீங்கள் உங்கள் காலை உணவைச் சாப்பிடக்கூட அமைதி தேவைப்படுகிறது. அப்படியானால் காலை உணவுதான் வாழ்வின் மிகப்பெரிய இலட்சியமா என்ன? நாய் கூடத்தான் காலை உணவு சாப்பிடுகிறது. எனவே அமைதியாய் இருப்பதும், ஆனந்தமாய் இருப்பதும் வாழ்வின் ஆரம்பப் படிகள். அடித்தளங்கள். வாழ்க்கைப் பாடத்தின் அரிச்சுவடிகளே அவைதான்.

03/08/2019

Chicken vs Man

ஒரு கோழிக்குஞ்சு தன் தாய் கோழியை பார்த்து கேட்டது.
ஏம்மா... இந்த மனிதர்களுக்கு மட்டும் ஏன் இத்தனை பெயர்கள்  இருக்கின்றன?
கோபால்.👨
முருகன். 👨
பழனிச்சாமி 👨
மாயாண்டி 👨
முருகேசன். 👨
ஆனால்  நமக்கு மட்டும் "கோழி" 🐔என்ற  ஒரே பெயர் மட்டும் கூப்பிடுகிறார்கள்.

அதற்கு தாய்கோழி 🐔:
மனிதர்களுக்கு  பல பெயர்கள் உள்ளன.
ஆனால் மனிதன் செத்தபிறகு அவனுக்கு  ஒரே பெயர் " பிணம் "💀💀💀💀💀💀💀
ஆனால் நாம் செத்தபிறகு  நமக்கு பல பெயர்கள் :
சிக்கன் 65.
சிக்கன் புலாவ்.
சில்லி சிக்கன்
சிக்கன் வறுவல்.
சிக்கன் தந்தூரி...
🤑🤑🤑🤓🤓😄😄👍

02/08/2019

Business model is changing

*Economy is not struggling...the business models are changing.*

Below is a very interesting insight :

Often heard nowadays that " _indian Economy is struggling_ ".

Sit back & dispassionately think "is the economy really struggling *or*  are business models struggling ?

Some food for thought:

1) Car sales are going down... *but Ola / Uber are rising.*

2)  Restaurants are going empty... *but home delivery is rising*

3) Tuition classes are not getting students *but online studying is rising*

4) Traders are struggling *but online market sites and reference based direct selling are breaking all records in sales.*

5) Old commission based businesses are snivelling... *but online services, at low cost, are finding takers.*

6) Cell phone bills have reduced & *internet penetration is increasing.*

7) Stable (read "Govt Jobs") are dwindling *but "Start up" jobs offering equity & Flexi work time are expanding.*

8) Jobs seekers are reducing but *job creaters are on the rise*.
Working 40 hrs a week for 40 years is trend of past. *Working for few years and spending quality time in contributing to society is the trend..*

The bitter truth is what we are experiencing is a transition phase
& Any transition is painful for the "well set"...
"The masters of the past".

*_It's challenging for those who's business models are based on ancient data...._*

*_Sunil Gavaskar style 35 not out cannot win one day matches today._*
*_We need a Rohit/Virat style today._*

It's a mystery for those who have never looked beyond traditional methods or have assiduously resisted change of any kind.

Economy is not struggling...
*Business is Changing.*
CHANGING CONSTANTLY..