19/05/2015

ஒன்பதின் தத்துவம்

ஒன்பதின் தத்துவம்,என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்
**************************************************
9ன் சிறப்பு தெரியுமா?
எண்களில் விசேஷமான
எண்ணாக கருதப்படுவது
ஒன்பது.
அந்த எண்ணில்
நீண்ட வாழ்வு எனும்
அர்த்தம் பொதிந்திருப்பதாகச்
சொல்கின்றனர்,

சீனர்களின் சொர்க்க கோபுரம்,
ஒன்பது வளையங்களால்
சூழப்பட்டுள்ளது.
எகிப்து, ஐரோப்பா, கிரீக்
முதலான நாடுகளும்
9-ஆம் எண்ணை
விசேஷமாகப் பயன்படுத்திப்
போற்றுகின்றன.
புத்த மதத்தில்,
மிக முக்கியமான
சடங்குகள் யாவும்
ஒன்பது துறவிகளைக் கொண்டே
நடைபெறும்.
தங்கம், வெள்ளி மற்றும்
பிளாட்டினத்தின்
சுத்தத்தை 999 என்று
மதிப்பிடுவார்கள்.

பெண்களின் கர்ப்பம்,
பூரணமாவது ஒன்பதாம் மாத
நிறைவில்தான்!
ஒன்பது எனும் எண்
இன்னும் மகத்துவங்கள்
கொண்டது.
ஒன்பது என்ற எண்ணுக்கு
வடமொழியில் நவம்
என்று பெயர்.
நவ என்ற சொல்
புதிய, புதுமை எனும்
பொருள் உடையது.

நவ சக்திகள்:
1,வாமை,
2,ஜேஷ்டை,
3,ரவுத்ரி,
4,காளி,
5,கலவிகரணி,
6,பலவிகரணி,
7,பலப்பிரமதனி,
8,சர்வபூததமனி,
9,மனோன்மணி,

நவ தீர்த்தங்கள்:
1,கங்கை,
2,யமுனை,
3,சரஸ்வதி,
4,கோதாவரி,
5,சரயு,
6.நர்மதை,
7,காவிரி,
8,பாலாறு,
9,குமரி

நவ வீரர்கள்:
1,வீரவாகுதேவர்,
2,வீரகேசரி,
3,வீரமகேந்திரன்,
4,வீரமகேசன்,
5,வீரபுரந்திரன்,
6,வீரராக்ஷசன்,
7,வீரமார்த்தாண்டன்,
8,வீரராந்தகன்,
9,வீரதீரன்

நவ அபிஷேகங்கள்:
1,மஞ்சள்,
2,பஞ்சாமிர்தம்,
3,பால்,
4,நெய்,
5,தேன்,
6,தயிர்,
7,சர்க்கரை,
8,சந்தனம்,
9,விபூதி.

நவ ரசம்:
1,இன்பம்,
2,நகை,
3,கருணை,
4,கோபம்,
5,வீரம்,
6,பயம்,
7,அருவருப்பு,
8,அற்புதம்,
9,சாந்தம் ,
ஆகியன நவரசங்கள் ஆகும்.

நவக்கிரகங்கள்:
1,சூரியன்,
2,சந்திரன்,
3,செவ்வாய்,
4,புதன்,
5,குரு,
6,சுக்கிரன்,
7,சனி,
8,ராகு,
9.கேது

நவமணிகள்:-

நவரத்தினங்கள்:
1,கோமேதகம்,
2,நீலம்,
3,வைரம்,
4,பவளம்,
5,புஸ்பராகம்,
6,மரகதம்,
7,மாணிக்கம்,
8,முத்து,
9,வைடூரியம்

நவ திரவியங்கள்:
1,பிருதிவி,
2,அப்பு,
3,தேயு,
4,வாயு,
5,ஆகாயம்,
6,காலம்,
7, திக்கு,
8,ஆன்மா,
9,மனம்

நவலோகம் (தாது):
1,பொன்,
2,வெள்ளி,
3,செம்பு,
4,பித்தளை,
5,ஈயம்,
6,வெண்கலம்,
7,இரும்பு,
8,தரா,
9,துத்தநாகம்

நவ தானியங்கள்:
1,நெல்,
2,கோதுமை,
3,பாசிப்பயறு,
4,துவரை,
5,மொச்சை,
6,எள்,
7,கொள்ளு,
8,உளுந்து,
9,வேர்க்கடலை

சிவ விரதங்கள் ஒன்பது:
1,சோமவார விரதம்,
2,திருவாதிரை விரதம்,
3,உமாகேச்வர விரதம்,
4,சிவராத்ரி விரதம்,
5,பிரதோஷ விரதம்,
6,கேதார விரதம்,
7,ரிஷப விரதம்,
8,கல்யாணசுந்தர விரதம்,
9,சூல விரதம்

நவசந்தி தாளங்கள்:
1,அரிதாளம்,
2,அருமதாளம்,
3,சமதாளம்,
4,சயதாளம்,
5,சித்திரதாளம்,
6,துருவதாளம்,
7,நிவர்த்திதாளம்,
8,படிமதாளம்,
9,விடதாளம்

அடியார்களின் பண்புகள்:
1,எதிர்கொள்ளல்,
2,பணிதல்,
3,ஆசனம் (இருக்கை) தருதல்,
4,கால் கழுவுதல்,
5,அருச்சித்தல்,
6,தூபம் இடல்,
7,தீபம் சாட்டல்,
8,புகழ்தல்,
9,அமுது அளித்தல்,

(விக்ரமார்க்கனின்
சபையிலிருந்த 9 புலவர்கள்; நவரத்னங்கள் எனச் சிறப்பிக்கப்படுவர்)
1,நவரத்னங்கள் (முனிவர்கள்)தன்வந்த்ரி,
2,க்ஷணபகர்,
3,அமரஸிம்ஹர்,
4,சங்கு,
5,வேதாலபட்டர்,
6,கடகர்ப்பரர்,
7,காளிதாசர்,
8,வராகமிஹிரர்,
9,வரருசி

அடியார்களின் நவகுணங்கள்:
1,அன்பு,
2,இனிமை,
3,உண்மை,
4,நன்மை,
5,மென்மை,
6,சிந்தனை,
7,காலம்,
8,சபை,
9,மவுனம்.

நவ நிதிகள்:
1,சங்கம்,
2,பதுமம்,
3,மகாபதுமம்,
4,மகரம்,
5,கச்சபம்,
6,முகுந்தம்,
7,குந்தம்,
8.நீலம்,
9.வரம்

நவ குண்டங்கள்:
யாகசாலையில் அமைக்கப்படும்
ஒன்பது வகையிலான
யாக குண்ட அமைப்புக்கள்:
1,சதுரம்,
2,யோனி,
3,அர்த்த சந்திரன்,
4,திரிகோணம்,
5,விருத்தம் (வட்டம்),
6.அறுகோணம்,
பத்மம்,
எண்கோணம்,

பிரதான விருத்தம்.
1,நவவித பக்தி :
2,சிரவணம்,
3,கீர்த்தனம்,
4,ஸ்மரணம்,
5,பாத சேவனம்அர்ச்சனம்,
6,வந்தனம்,
7,தாஸ்யம்,
8,சக்கியம்,
9,ஆத்ம நிவேதனம்

நவ பிரம்மாக்கள் :
1,குமார பிரம்மன்,
2,அர்க்க பிரம்மன்,
3,வீர பிரம்மன்,
4,பால பிரம்மன்,
5,சுவர்க்க பிரம்மன்,
6,கருட பிரம்மன்,
7,விஸ்வ பிரம்மன்,
8,பத்ம பிரம்மன்,
9,தராக பிரம்மன்

நவக்கிரக தலங்கள் -
1,சூரியனார் கோயிவில்,
2,திங்களூர்,
3,வைத்தீஸ்வரன் கோவில்,
4,திருவெண்காடு,
5,ஆலங்குடி,
6,கஞ்சனூர்,
7,திருநள்ளாறு,
8,திருநாகேஸ்வரம், 9,கீழ்ப்பெரும்பள்ளம்

நவபாஷாணம் -
1,வீரம்,
2, பூரம்,
3, ரசம்,
4,ஜாதிலிங்கம்,
5,கண்டகம்,
6,கவுரி பாஷாணம்,
7,வெள்ளை பாஷாணம்,
8,ம்ருதர்சிங்,
9,சிலாஷத்

நவதுர்க்கா -
1,ஸித்திதத்ரி,
2,கஷ்முந்தா,
3,பிரம்மாச்சாரினி,
5,ஷைலபுத்ரி,
7,மகா கவுரி,
8,சந்திரகாந்தா,
9,ஸ்கந்தமாதா,
6.மகிஷாசுரமர்த்தினி, -,காளராத்ரி

நவ சக்கரங்கள் -
1,த்ரைலோக்ய மோகன சக்கரம்,
2,சர்வசாபுரக சக்கரம்,
3,சர்வ சம்மோகன சக்கரம்,
4,சர்வ சவுபாக்ய சக்கரம்,
5,சர்வார்த்த சாதக சக்கரம்,
6,சர்வ ரக்ஷõகர சக்கரம்,
7,சர்வ ரோஹ ஹர சக்கரம்,
8,சர்வ ஸித்தி ப்ரத சக்கரம்,
9,சர்வனந்தமைய சக்கரம்.

நவநாதர்கள் -
1,ஆதிநாதர்,
2,உதய நாதர்,
3,சத்ய நாதர்,
4,சந்தோஷ நாதர்,
5,ஆச்சாள் அசாம்பயநாதர்,
6,கஜ்வேலி கஜ்கண்டர் நாதர்,
7,சித்த சொவ்றங்கி
8,நாதர், மச்சேந்திர நாதர்,
9,குரு கோரக்க நாதர்

உடலின் நவ துவாரங்கள் :
இரண்டு கண்கள்,
இரண்டு காதுகள்,
இரண்டு மூக்குத் துவாரங்கள்,
ஒரு வாய்,
இரண்டு மலஜல துவாரங்கள்

உடலின் ஒன்பது சக்கரங்கள் :
1,தோல்,
2,ரத்தம்,
3,மாமிசம்,
4,மேதஸ்,
5,எலும்பு,
6,மஜ்ஜை,
7,சுக்கிலம்,
8,தேஜஸ்,
9,ரோமம்

18 புராணங்கள்,
18 படிகள் என அனைத்தும்
9-ன் மூலமாக தான் உள்ளன.

காயத்ரி மந்திரத்தை
108 முறை ஜபிக்க வேண்டும்.
எல்லா தெய்வத்தின்
நாமாவளியும் ஜப மாலையின்
எண்ணிக்கையும்
இதை அடிப்படையாகக் கொண்டதுதான்!
புத்த மதத்தினர்
108 முறை மணியடித்து,
புது வருடத்தை வரவேற்றுக்
கொண்டாடுகின்றனர்.
சீனாவில்,
36 மணிகளை
மூன்று பிரிவாகக் கொண்டு,
சு ஸூ எனப்படும்
மாலையைக் கொண்டு
ஜபம் செய்வார்கள்.

ஸ்ரீகிருஷ்ணருக்குப்
பிரியமான மாதம்... மார்கழி.
இது வருடத்தின் 9-வது மாதம்!
மனிதராகப் பிறந்தவன்
எப்படி வாழ வேண்டும் என
வாழ்ந்து காட்டிய
ஸ்ரீராமபிரான் பிறந்தது,
9-ஆம் திதியான
நவமி நாளில்தான்.
9 என்ற எண்ணை
கேளிக்கையாக எண்ணாமல்
புராணங்களிலும்,
நடைமுறையிலும் சிறப்பிடம் பெற்றுள்ளது

15/05/2015

நோயற்ற வாழ்விற்கு 30 குறிப்புகள்.....

நோயற்ற வாழ்விற்கு 30 குறிப்புகள்.....

1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.

2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.

3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.

4. உடற்பயிர்ச்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.

5. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.

6.  நிறைய புத்தகம் படியுங்கள்.

7. ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.

8. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.

9. குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
10. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள்.அவர்கள் பயணிக்கும் /மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.

11. எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.

12. உங்களால் முடிந்த அள்வு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.

13. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.

14. நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.

15. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.

16. கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.

17. வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.

18. எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.

19. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும்,பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.

20. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.
21. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும்,வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.

22. மன்னிக்கப் பழகுங்கள்.

23. 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.

24. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.

25. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.
26. உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.

27. ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

28. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்.

29. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ,நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.

30. எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும். 

12/05/2015

30 வகை கீரை

ஆரோக்கிய வாழ்விற்குகீரைகள்
30 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்

அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.

காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.

சிறுபசலைக்கீரை- சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.

பசலைக்கீரை- தசைகளை பலமடையச் செய்யும்.

கொடிபசலைக்கீரை- வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.

மஞ்சள் கரிசலை- கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.

குப்பைகீரை- பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.

அரைக்கீரை- ஆண்மையை பெருக்கும்.

புளியங்கீரை- சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.

பிண்ணாருக்குகீரை- வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.

பரட்டைக்கீரை- பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.

பொன்னாங்கன்னி கீரை- உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.

சுக்கா கீரை- ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.

வெள்ளை கரிசலைக்கீரை- ரத்தசோகையை நீக்கும்.

முருங்கைக்கீரை- நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.

வல்லாரை கீரை- மூளைக்கு பலம் தரும்.

முடக்கத்தான்கீரை- கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.

புண்ணக்கீரை- சிரங்கும், சீதளமும் விலக்கும்.

புதினாக்கீரை- ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.

நஞ்சுமுண்டான் கீரை- விஷம் முறிக்கும்.

தும்பைகீரை- அசதி, சோம்பல் நீக்கும்.

கல்யாண முரங்கைகீரை- சளி, இருமலை துளைத்தெரியும்.

முள்ளங்கிகீரை- நீரடைப்பு நீக்கும்.

பருப்புகீரை- பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.

புளிச்சகீரை- கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.

மணலிக்கீரை- வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.

மணத்தக்காளி கீரை- வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.

முளைக்கீரை- பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.

சக்கரவர்த்தி கீரை- தாது விருத்தியாகும்.

வெந்தயக்கீரை- மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.

தூதுவலை- ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.

தவசிக்கீரை- இருமலை போக்கும்.

சாணக்கீரை- காயம் ஆற்றும்.

வெள்ளைக்கீரை- தாய்பாலை பெருக்கும்.

விழுதிக்கீரை- பசியைத்தூண்டும்.

கொடிகாசினிகீரை- பித்தம் தணிக்கும்.

துயிளிக்கீரை- வெள்ளை வெட்டை விலக்கும்.

துத்திக்கீரை- வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.

காரகொட்டிக்கீரை- மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.

மூக்கு தட்டைகீரை- சளியை அகற்றும்.

நருதாளிகீரை- ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்.

09/05/2015

2015 பிளஸ் டூ தேர்வு முடிவுகள்

2015 பிளஸ் டூ தேர்வு முடிவுகள் மாவட்ட வாரியாக தேர்ச்சி விகித விபரம் !

விருதுநகர் - 97.46%

பெரம்பலூர் - 97.25%

ஈரோடு - 96.06%

நாமக்கல் - 95.75%

தூத்துக்குடி - 95.5%

திருச்சி - 95.36%

கன்னியாகுமரி - 95.21%

ராமநாதபுரம் - 94.66%

கோவை - 94.36%

திருப்பூர் - 94.31%

சிவகங்கை - 94.71%

திருநெல்வேலி - 93.91%

தேனி - 93.8%

மதுரை - 92.87%

தர்மபுரி - 92.31%

கரூர் - 91.71%

சென்னை - 91.54%

சேலம் - 90.69%

காஞ்சிபுரம் - 90.68%

தஞ்சாவூர் - 90.26%

திண்டுக்கல் - 90.22%

புதுக்கோட்டை - 89.56%

புதுச்சேரி - 88.15%

திருவள்ளூர் - 87.32%

ஊட்டி - 86.74%

கிருஷ்ணகிரி - 86.48%

நாகப்பட்டினம் - 86.45%

கூடலூர் - 84.69%

விழுப்புரம் - 83.96%

திருவண்ணாமலை - 83.43%

திருவாரூர் - 83.08%

வேலூர் - 81.39%

அரியலூர் - 80.92%

நம்பிக்கையை இழக்கக் கூடாது

{ஒரு தடவை படித்து பாருங்கள் . பல தடவை யோசிப்பீர்கள் இந்த கதையை }

நான்கு மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டு இருந்தன. மெலிதாய்காற்று வீசிக்கொண்டு இருந்தது....

காற்றை கண்டதும்‘ அமைதி ‘ என்ற முதல் மெழுகுவர்த்தி ‘ ஐயோ காற்று வீசுகின்றது, நான் அணைந்துவிடுவேன் என்று பலவீனமாக சொன்னது. காற்று பட்டதும் அணைந்துவிட்டது.

‘அன்பு ‘ என்ற அடுத்த மெழுகுவர்த்தியும் காற்றை எதிர்க்க முடியாது’என்று அணைந்துவிட்டது.

அறிவு ‘ என்ற மூன்றாவது மெழுகுவர்த்தியும்
காற்றை எதிர்க்க முடியாமல்அணைந்தது.

நான்காவது மெழுகுவர்த்தி மட்டும் காற்று வீசிய
சில நொடிகள் போராடி ஜெயித்துவிட்டது. அப்போது அந்த அறையில் ஒரு சிறுவன் நுழைந்தான்.‘அடடா மூன்று மெழுகுவர்த்திகளும் அணைந்துவிட்டதே என்று கவலையுடன் சொன்னான்.

அதற்கு எரிந்துகொண்டு இருந்த நான்காவது மெழுகுவர்த்தி சொன்னது,வருத்தப்படாதே நான் இருக்கின்றேன். என்னை வைத்து மற்றமூன்றையும் பற்ற வைத்துகொள்’ என்றது.

சிறுவன் உடனே..‘
நான்காவது மெழுகுவர்த்தியை பார்த்து ” உன்பெயர் என்ன ?”என்று கேட்டான் .

'நம்பிக்கை' என்றது மெழுகுவர்த்தி.

நாம் எப்பொதும் வாழ்வில் நம்பிக்கையை மட்டும்இழக்கக் கூடாது.

02/05/2015

இந்தியாவிலே இருங்கள்

இந்திய மிருக காட்சி சாலையில் இருந்த ஒரு சிங்கத்துக்கு, அமெரிக்கா போக ஆசை வந்தது. ஒரு அமெரிக்க அதிகாரியை பிடித்து, ஒரு வழியாக அந்த சிங்கம், அமெரிக்காவுக்கு போய் சேர்ந்தது.

அமெரிக்காவில் உள்ள பிரபல உயிரியியல் பூங்காவில் அந்த சிங்கத்துக்கு இடம் கிடைத்தது. ஆனால், தினமும் உணவாக வாழைப்பழம் மட்டுமே தரப்பட்டது. ஏழு நாட்கள் தொடர்ந்து வாழைப்பழம் மட்டுமே தரப்பட்டதால், பொறுமையிழந்த சிங்கம், அங்குள்ள ஊழியரிடம், "ஏய்... நான் இந்தியாவில் காட்டு ராஜா... அங்கு எனக்கு ஆடு, மாடு எல்லாம் கொடுத்தாங்க... ஆனா, நீங்க வெறும் வாழைப் பழம் மட்டும் தர்றீங்களே...' என, மிரட்டலோடு கேட்டது.

அந்த ஊழியர், "உண்மை தான்... நீ இந்தியாவில் காட்டு ராஜா தான்... ஆனால், அமெரிக்காவுக்கு குரங்கு விசாவில் தான் வந்திருக்கிறாய்... அதனால், வாழைப்பழம் மட்டுமே உனக்கு தர முடியும்...' என்று கூறினார்.

இந்திய இளைஞர்கள் சொந்த நாட்டில் திறமையை வெளிப்படுத்த வேண்டும். "நீங்கள் அமெரிக்கா போய் குரங்காக இருப்பதை விட, இந்தியாவில் ராஜாவாக இருங்கள".