21/03/2020

கொரோணா Corona Covid 19

ஊஹானில் பிறந்தாய்!!! 
உறவாடி நுழைந்தாய்!!! 

உறக்கம் கலைத்தாய்!! 
உயிரை உறிஞ்சுகிறாய்!!! 

முழித்து முழித்து விழிக்கிறோம்..
விழித்து விழித்து முழிக்கிறோம் 
விடையொன்றும் அறியாமல்!!! 

ஒற்றைத் தும்மல் இருமலில்..
கடவுச்சீட்டு எதுவுமின்றி,
கண்டம் விட்டு கண்டம் பறக்கிறாய்!!! 
உல்லாசமாய் உலவுகிறாய்!!! 
உணர்வின்றி புலம்புகிறோம்!!! 

சனமற்ற சாலைகள்...
சலனமற்ற வீதிகள்..
முகமூடி மனிதர்கள்.. 
காலியாய் கடைகள்.. 
அடைக்கப்பட்ட அலுவலகங்கள்... 
சிரிப்பில்லா சிறுவர் பூங்கா.. 
ஆளில்லா விமானங்கள்
அறவமற்ற அங்காடிகள்.. 

பாதாளம் போன பங்குச் சந்தைகள்...
கரைந்து போன கரன்சிகள்... 
சல்லியாய்ப் போன மில்லியனர்கள்.. 
உருகிப்போன தங்கங்கள்..
உறைந்து போன  வல்லரசுகள்..

அருவமும் உருவமுமிலா நிலை நிற்கின்றாய்!!!
ஆனாலும் அடிமனதில் விஸ்வரூபம் எடுக்கின்றாய்!!! 

ஆலயங்களில் அர்ச்சனை, துவா, மன்றாடல் இல்லை!!

மணியோசை 
பாங்கோசை கேட்கவில்லை!!! 

கேளிக்கை கொண்டாட்டங்கள்  இல்லை!!! 

மதங்களுக்கும், கொள்கைகளுமாய்  
மதியிழந்து 
வெட்டிப் பேச்சும்  வீண் சண்டையுமாய் விரயமாய்ப் போனது வாழ்க்கை!!! 

மூச்சை முடக்கினாய்!!! 
ஆணவம் அடக்கினாய்!!! 

மூச்சு இருந்தால் தானே பேச்சு ?

எவர் மூச்சில் நீ எம்முள் நுழைவாயோ என்கின்ற அச்சத்தில்.. 
பூட்டிய கதவுகளுக்குள்ளிருந்து,
புலம்பித் தவிக்கிறோம்!! திறந்த மனதோடு அச்சத்தில்  இறைஞ்சுகிறோம்!!! 

நீ யார்? எதற்காக வந்தாய்?
நீ சென்று விடு , எங்களை விட்டு விடு!!! 

காடழித்து நாடு கொண்டோம்!! 
வீறு கொண்டு வெகுண்டழித்"தீ"ய்!!! 

மரமழித்து, மலையழித்து மாளிகை கட்டினோம்!! 
எரிமலையாய் எதிர்த்தடித்தாய்!! 

ஆறு, ஏரி, குளம் அழித்தோம்!!!
ஆழிப்பேரலையாய் அவதரித்தாய்!!! 

விலங்கினத்தையேனும்  விட்டுவைத்தோமா?
வேட்டையாடி கொ(தி)ன்று குவித்தோம்!! 

அவைதம் அலறல், கதறல் கேட்டு அடித்தொழிக்க  வந்தாயோ?

எரிமலை எரிதழல் எம்மைச் சீண்டவில்லை என்கின்ற காரணத்தால்...  ஆழிப்பேரலையை அலட்சியமாய்க் கடந்தோம் என்கின்ற காரணத்தால்,
எப்படிப் புகட்டியும் எமக்கு உரைக்கா காரணத்தால்.. 

ஆறாம் அறிவிற்கு, மாறா-மறவாப் பாடம் புகட்ட.. 
"கரோனா" வடிவில்
களமிறங்கி ஆடுகிறாய்.. கண்டங்களைச் சுழற்றுகிறாய்?? 

மடி கணினியும்,  கை பேசியுமாய்.. 
நிற்க நேரமின்றி நிமிர விருப்பமின்றி.. 
ஓடிய நாங்கள் உருக் குலைந்து நிற்கிறோம்!!! 

யோசிக்கிறோம்!!!! 
நேசிக்கிறோம்!!! 

கணக்கும் பிணக்குமாய் பிளவுண்ட குடும்பங்கள் 
பிணைந்திணைந்து நிற்கின்றன!!! 

ஒத்துவராதென்று ஒதுங்கிய ஒதுக்கிய உள்ளங்கள் - இன்று அடுத்தவர் பக்க நியாயங்களை அலசி ஆய்ந்து பார்க்கின்றன!!! 

நிற்க நேரமின்றி ஓடியபின்....
கற்க நிறைய இருக்கிறது என்பதைக் கற்றுக் கொண்டோம்!!!

ஆன்லைனில் ஆஃபர் ஆப்பம் ஆர்டரில்லை!! ஆட்டாங்கல் சட்னி தொட்டு,  ஆவி பறக்க அவித்த இட்லி ஆசை ஆசையாய் உண்கிறோம்!! 

உடற்பயிற்சி  செய்கிறோம்!!
உறவாடி மகிழ்கிறோம்!!!

கூட்டாஞ்சோறு ஆக்குகிறோம்!!! 
கூடி ஒன்றாய் உண்கிறோம்!!!

அப்பா அம்மாவோடு அந்தாக்ஷரி ஆடுகிறோம்!!!

பாட்டி கதை கேட்கிறோம்!!!
பரமார்த்தமாய் இருக்கிறோம்!!!

வானம்பாடியாய் ஆடிப் பாடி பறக்கிறோம்...
ஆனந்தமாய் இருக்கிறோம்!!! 

சின்னஞ்சிறு கதைகள் பேசுகிறோம்!!!
சிரித்து மகிழ்ந்து இருக்கிறோம்!! 

ஒரு ஒரு சுவாசத்தையும் உணர்ந்துணர்ந்து உள்ளிழுக்கிறோம்!!

நாசியில் நுழையும் மாசிலா மூச்சுக் காற்றை நன்றியோடு  நினைக்கிறோம்!! 

இது தானே நீ விரும்பியது ?

மனமுருகி மன்றாடுகிறோம்!!! 
இறைஞ்சிக் கேட்கிறோம்!! 
எம்மை இப்படியே இருக்கவிடு!!! 

இனி நீ மௌனமாய் சென்று விடு .🙏 🙏 🙏

02/03/2020

அப்பா

* அப்பா ஏன் எப்போதும் பின்தங்கியிருக்கிறார் என்று தெரியவில்லை *

 1. அம்மா 9 மாதங்கள் சுமக்கிறார், அப்பா 25 வருடங்கள் சுமக்கிறார், இருவரும் சமம், அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.

 2. அம்மா குடும்பத்திற்கு ஊதியம் இல்லாமல் வேலை செய்கிறார், அப்பா தனது சம்பளத்தை குடும்பத்திற்காக செலவிடுகிறார், அவர்களின் முயற்சிகள் இரண்டும் சமம், அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.

 3. அம்மா நீங்கள் விரும்பியதை சமைக்கிறார், அப்பா நீங்கள் விரும்பியதை வாங்குகிறார், அவர்களின் காதல் இரண்டும் சமம், ஆனால் அம்மாவின் காதல் உயர்ந்ததாக காட்டப்படுகிறது.  அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று தெரியவில்லை.

 4. நீங்கள் தொலைபேசியில் பேசும்போது, ​​முதலில் அம்மாவுடன் பேச விரும்புகிறீர்கள், உங்களுக்கு காயம் ஏற்பட்டால், நீங்கள் ‘அம்மா’ என்று அழுகிறீர்கள்.  உங்களுக்குத் தேவைப்படும்போது மட்டுமே நீங்கள் அப்பாவை நினைவில் கொள்வீர்கள், ஆனால் மற்ற நேரங்களில் நீங்கள் அவரை நினைவில் கொள்ளவில்லை என்று அப்பா ஒருபோதும் மோசமாக உணரவில்லையா?  குழந்தைகளிடமிருந்து அன்பைப் பெறும்போது, ​​தலைமுறைகளாக, அப்பா எப்போதும் பின்தங்கியிருப்பதைக் காண்கிறோம்.

 5. அலமாரியில் வண்ணமயமான புடவைகள் மற்றும் குழந்தைகளுக்கான பல ஆடைகள் நிரப்பப்படும், ஆனால் அப்பாவின் உடைகள் மிகக் குறைவு, அவர் தனது சொந்த தேவைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை, அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.

 6. அம்மாவிடம் பல தங்க ஆபரணங்கள் உள்ளன, ஆனால் அப்பா தனது திருமணத்தின் போது வழங்கப்பட்ட ஒரே ஒரு மோதிரத்தை மட்டுமே வைத்திருக்கிறார்.  இன்னும் அம்மா குறைந்த நகைகள் புகார் மற்றும் அப்பா இல்லை.  அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்பது இன்னும் தெரியவில்லை.

 7. குடும்பத்தை கவனித்துக்கொள்வதற்காக அப்பா தனது வாழ்நாள் முழுவதும் மிகவும் கடினமாக உழைக்கிறார், ஆனால் அங்கீகாரத்தைப் பெறும்போது, ​​அவர் எப்போதும் பின்தங்கியிருப்பார்.

 8. அம்மா கூறுகிறார், நாங்கள் இந்த மாதம் கல்லூரி டியூஷன் செலுத்த வேண்டும், தயவுசெய்து திருவிழாவிற்கு எனக்காக ஒரு சேலை வாங்க வேண்டாம், அதே நேரத்தில் அப்பா புதிய ஆடைகளைப் பற்றி கூட யோசிக்கவில்லை. அவர்களின் காதல் சமம், அப்பா ஏன் என்று இன்னும் தெரியவில்லை  பின் தங்கி.

 9. பெற்றோர் வயதாகும்போது, ​​குழந்தைகள் சொல்கிறார்கள், வீட்டு வேலைகளை கவனித்துக்கொள்வதில் அம்மா குறைந்தது பயனுள்ளதாக இருக்கும், ஆனால் அவர்கள் சொல்கிறார்கள், அப்பா பயனற்றவர்.

 அப்பா * பின்னால் இருக்கிறார் (அல்லது ‘பின்னால்’) * ஏனெனில் அவர் குடும்பத்தின் முதுகெலும்பாக இருக்கிறார்.  அவர் காரணமாக, நாம் நிமிர்ந்து நிற்க முடிகிறது.  அநேகமாக, அவர் * பின்தங்கியிருப்பதற்கான காரணம் இதுதான்.

 இந்த இடுகையுடன் எத்தனை பேர் தொடர்புபடுத்துவார்கள், இதை ஒப்புக்கொள்வார்கள் என்று தெரியவில்லை .......