31/01/2020

நம்பிக்கை தரும் வரிகள்

கடைபிடிக்க வேண்டிய  
நம்பிக்கை தரும் வரிகள்

ஒற்றைக்காலில் நின்று 
தவம் செய்தாலும் 
மீன் கிடைக்கும்
 வரையில் முயற்சியை 
கைவிடாத 
வெண்கொக்கு!

ஆயிரக் கணக்கினில் 
அடி வாங்கினாலும் 
சிலையாகும் வரையில் 
உளியை உறவாக 
எண்ணும் கருங்கல்!

கால்களில்லாத போதிலும் 
பாறைகளில் மோதியும் 
படுகுழியில் விழுந்து 
கடலைச் சேரும்
 குறிக்கோள்களை
 கடத்திவிடாத நதி!

கைகளை
 துண்டித்தாலும்
 தலையைத் தறித்தாலும் 
நிழல் பரப்பும் 
எண்ணத்தில் மீண்டும்
 தழைக்கின்ற மரம்!

இரும்பு முள்ளில்
 குத்தினாலும்
 ரணத்தையும் கூட 
ரசித்துக்கொண்டே 
வண்டியிழுக்கும்
 எருதுகள்!

கனவு
 நிறைவேறும்வரை 
கலைத்து விடாதே 
முயற்சியை ஏனெனில்..

முயற்சி மட்டுமே
 முன்னேற்ற
 மாளிகைக்கு
 முதலிடமாகும்!

வெற்றிப்பாதை!!

உருக்கப்படும்
 தங்கம் தான்
 உரு மாறி
 நகையாகிறது!

அறுக்கப்படும் 
மரம் தான் 
அழகான
 ஜன்னலாகிறது!

இடிக்கப்படும்
 நெல் தான்
 உமி நீங்கி
 அரிசியாகிறது!

துவைக்கப்படும் 
துணி தான்
 தூய்மை பெற்று
 வெண்மையாகிறது!

ஏற்றப்படும் விளக்குதான் 
இருள் நீக்கி 
ஒளி தருகிறது!

தட்டப்படும் தந்தி தான்
 தம்புராவில் 
இசை தருகிறது!

செதுக்கப்படும் 
பளிங்கு தான் 
செம்மை பெற்றுச் 
சிலையாகிறது!

பதப்படுத்தப்படும் 
தோல் தான் பயனுள்ள 
காலணியாகிறது!

மிதிக்கப்படும் மண் 
தான் மிருதுவான 
பானையாகிறது!

புதைக்கப்படும் விதை 
தான் மண்ணை விட்டு 
மரமாக எழுகிறது!

தோற்றுப்போகும் 
மனிதன் தான் துணிவு 
பெற்று வீரனாகிறான்!

தொடர்ந்து முயலும் 
வீரன் தான் சரித்திரம் 
படைத்தது வாழ்கிறான்!

26/01/2020

சுதந்திர தினம் & குடியரசு தினம்

*சுதந்திர தினத்திற்கும் குடியரசு தினத்தன்றும் கொடி ஏற்றுவதில் உள்ள வேறுபாடுகள்.......*

*# முதல் வித்தியாசம்......*

பதினைந்து ஆகஸ்ட் சுதந்திர தினத்தன்று கொடி  ஏற்றும்போது கொடி கீழிருந்து மேலே கயிற்றால்  இழுத்து பிறகு கட்டப்பட்டுள்ள கொடி திறக்கப்பட்டு பறக்கவிடப்படும் அன்றைய தினத்திற்கு மரியாதை செய்யும் விதமாக செய்யப்படும் இந்த நிகழ்வுக்கு "கொடியேற்றம்" அதாவது Flag hoisting என்றழைக்கபடுகிறது.,

இருபத்து ஆறு ஜனவரி மாதம் குடியரசு தினத்தன்று
கொடி கம்பத்தின் உச்சியிலே கட்டப்பட்டு இருக்கும். அந்த முடிச்சு அவிழ்க்கப்பட்டு அதாவது கொடி  திறக்கப்பட்டு பறக்கவிடப்படும்  இதை கொடியை பறக்கவிடுதல்  அதாவது flag unfurling என்பார்கள்..

*#இரண்டாவது   வித்தியாசம்......*

சுதந்திரம் கிடைத்தபோது அரசியல் சட்டம் அமுலுக்கு வரவில்லை. அப்பொழுது பிரதமர் தான் நாட்டில் முதல் மனிதராக political head  கருதப்பட்டார். குடியரசு தலைவர் ஒரு constitutional monarchy, அவர் அப்போது பதவி பிரமாணம் எடுத்துக்கொள்ளவில்லை. இதனால் சுதந்திர தினத்தில் பிரதமர்  கொடி ஏற்றுகிறார். குடியரசு தலைவர் மாலையில் ரேடியோ தொலைக்காட்சி மூலமாக உரையாற்றுவார்..

குடியரசு தினத்தன்று அரசியல் சட்டம் அமுலுக்கு வந்தபடியால்  அரசியல் சட்டத்தின் தலைவர் மற்றும் பாதுகாவலர் என்ற முறையில் குடியரசு தலைவர் கொடியை பறக்கவிடுவார்..

*# மூன்றாம் வித்தியாசம்.......*

சுதந்திர தினத்தன்று டில்லி செங்கோட்டையில் கொடி ஏற்றபடுகிறது

குடியரசு தினத்தன்று டில்லி ராஜ்  பாத்தில் கொடி பறக்கவிடப்படுகிறது......