09/05/2019

அக்‌ஷ்ய திருதியை

அஷயதிருதியை என்றால் பலரும் தங்க உலோகத்தை வாங்குவது என்றுதான் அறிந்திருப்பார்கள்.

கீழ்க்கண்ட  இவைகளையும் தெரிந்து கொள்வோம்.

1.ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டினம் அருகில் உள்ள ஸிம்மாசல நரஸிம்ம ஸ்வாமியின்  திருமுக தரிசனம் இந்த ஒருநாள்தான் நடைபெறும். மற்றபடி வருடம்முழுக்க திருமுகத்தில் சந்தனகாப்புதான் சாற்றி இருப்பார்கள்.

2.  பூரி ஜகந்நாதர் ஆலயத்தில் வருடாவருடம் நடைபெறும் ரதயாத்திரைக்கான தேர் கட்டும் பணியை அன்றுதான் தொடங்குவார்கள்.

3. இமயமலையில்  உள்ள பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோவில்கள் அன்று முதல் தரிசனத்திற்கு திறப்பார்கள்.

4.கும்பகோணத்தில் அன்று காலை 12 எம்பெருமான்களுக்கு கருடசேவை வைபவம் நடைபெறும்.

5.பரசுராமர் அன்றுதான் தோன்றினார்.

6.கங்கைநதி அன்று தான் விண்ணிலிருந்து பூமியில் கால்பதித்தாள்.

7.பாண்டவர்களுக்கு சூரியபகவானிடமிருந்து அன்று தான் அட்சயபாத்திரம் கிடைத்தது.

8.சுதாமா என்கிற குசேலர் அன்றுதான் துவாரகையில் கிருக்ஷ்ணனை ஸந்திதார்.

9. ஆதிசங்கரர்அன்று தான் கனகதாரா  ஸ்தோத்திரம் இயற்றினார்.

10. குபேரண் அன்று தான் பத்மநிதி மற்றும்  சங்கநிதியை பகவானிடமிருந்த கிடைக்கப்பெற்றான்.

11. காசி அன்னபூரணி அன்று  தான்  தன்னுடைய தரிசனத்தை உலக மக்களுக்கு காட்சியளித்து அருள் புரிந்தாள்.

12. வியாஸபகவான் அன்று தான் மகாபாரதத்தை எழுத ஆரம்பித்தார்.

நாமும் பகவானுக்கு அன்று பூசைசெய்து அவனது அருள்பெறுவோம்.

வாழ்க வளமுடன்