29/12/2020

இறைவனும் புரோகிராமும்

இத்தனை கோடிக்கணக்கான மக்களையும் ஒரே இறைவன் தனித்தனியாக எப்படி காண்பான்...எப்படி ஒவ்வொருவரையும் தனித்தனியாக கட்டுப்படுத்துவான்....

வெரி சிம்பிள்...ஒரு மாநகரில் ஒரே நெட்ஒருக்கில் லட்சக்கணக்கான சிம் கார்டுகள் உண்டு...ஒரு சிம்கார்டுக்கு ஒரு நாளைக்கு ஒன்றரை ஜிபி டேட்டா என்று
வைத்துக்கொள்வோம்...லட்சக்கணக்கான சிம் கார்டுகள் இருந்தாலும் அவற்றை எல்லாம் நிர்வகிப்பது ஒரே ப்ரோக்ராம் தான்...ஆனாலும் உங்களுக்கு வழங்கப்பட்ட டேட்டா முடிந்ததும் ஆட்டோமாட்டிக்காக இணைய வேகம் குறைந்து விடுகிறது...

அடுத்த நொடியில் நீங்கள் எந்தெந்த இணையத்திர்கு எவ்வளவோ டேட்டா செலவு
செய்துள்ளீர்கள் என்ற புள்ளி விபரத்தையும் எடுத்து கொள்ளலாம்...லட்ச கணக்கான இணைப்புகள் ஏன் கோடிக்கணக்கான இணைப்புகள் இருந்தாலும் ஒரே ஒரு software program ஒவ்வொரு தனித்தனி இணைப்பையும் எப்படி திறமையாக கையாளுகிறது.

..ஒன்றரை ஜிபி முடிந்து விட்டால் தலைகீழாக நின்றாலும் மேற்கொண்டு அதிவேகஇணைப்பை பெற முடியாது...அதாவது அந்த புரோக்ராமை ஏமாற்ற முடியாது...
ஒரே ஒரு புரோகிராம் எப்படி கோடிக்கணக்கான இணைப்புகளை ஒரே நேரத்தில் தனித்தனியாக கையாளுகிறதோ அது போலத்தான் இறைவனும் கையாளுகிறான்....

அது போல ஒருவரது பாவ புண்ணிய கணக்குகள் எப்படி இறைவனால் தனிதனியாக காண முடிகிறது
அதுவும் இது போல தான்...

நீங்கள் உங்கள் இன்டர்நெட் வேலிடிட்டி முடிந்த பிறகு ரேசார்ஜ் செய்ய உங்களுக்கு மட்டுமேயான சிறப்பு சலுகையை தேடும் போது நீங்கள் அந்த சிம் கார்டை எத்தனை ஆண்டுகளாக பயன் படுத்துகிறீர் என்பதை பொறுத்தே நொடியில் தனித்தனியாக அடையாளம் கண்டு அவர்களின் கடந்த கால
பயன்பாட்டினை ஆராய்ந்து அதற்க்கு ஏற்ப சலுகை வழங்குகிறது...இதற்காக அது எடுத்துக்கொள்ளும் நேரம் சில நொடிகள் தான்...

மனிதன் வடிவமைத்த புரோக்ராமே இவ்வளவு செய்யும் போது , "மனிதனையே வடிவமைத்த இறைவன்" எவ்வளவு செய்வான்...
இதை எண்ணி , இறைவன் எப்போதும் நம்மையும் கண்காணித்து கொண்டு இருக்கிறான் என அச்சம் கொண்டு பாவத்தில் இருந்து விலகி இருப்போம்...இறைவனுக்கு உண்மையாய் வாழ்வோம்....

15/11/2020

யதார்த்தம்

யாரெல்லாம் நம்மோடு இருப்பார்கள், விலகுவார்கள் என்று காலம் முடிவு செய்வதில்லை.
*அவரவர்களின் வார்த்தையும், நடத்தையும் தான் முடிவு செய்கிறது.*

வாய் தவறி விழும் பேச்சுக்கள். கை தவறி விழும் கண்ணாடியை விட கூர்மையானது.
*யாரிடம் பேசுகிறோம் என்பதை விட என்ன பேசுகிறோம் என்பதை அறிந்து கொண்டு பேசுங்கள்.*

நிம்மதியுடன் வாழ்கிறேன் என யாராலும் எளிதில் சொல்லப்படுவதில்லை.
*வாழ்க்கை அவ்வளவு எளிதில் நிம்மதியை யாருக்கும் தந்து விடுவதில்லை.*

மற்றவர் தவறைக் கவனித்துக்கொண்டே இருப்பவர்கள்.
*தன் தவறுகளை வளர்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.*

பணம் இருந்தால் நீ உயர்ந்தவன்  
குணம் இருந்தால் நீ *குப்பை.*
நடித்தால் நீ *நல்லவன்.*
உண்மை பேசினால் *பைத்தியக்காரன்.*
அன்பு காட்டினால் *ஏமாளி.*
எடுத்துச் சொன்னால் *கோமாளி.*

இறைவன் தனக்குப் பிடித்தவர்களுக்கே அதிகப் பொறுப்புகளை கொடுத்து.
அதன் பொருட்டு சோதனைகளை ஏற்படுத்தி.
பக்குவத்தையும், நிதானத்தையும் பரிசளிக்க விரும்புகிறான் 

நிலவை....தூரத்தில் இருந்து ரசிப்பதை போல. 

சில உறவுகளையும்..... தூரத்திலிருந்து ரசிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
*சில வலிகள் இல்லாமல் இருக்க.*

தன்னுடைய செயலும் தன்னுடைய வார்த்தைகளும் மட்டும்தான் சரியன்று வாதாடுபவர்கள் மத்தியில் .
அமைதி மட்டும் உன் ஆயுதமாக வைத்துக்கொள்.
*அவர்களுக்கு புரியவைக்க.*
*வரும் காலம் ஒன்று உள்ளது.*
*சிந்தித்து செயல்படு இதுவும் கடந்து போகும்.*

நிலையென்று ஒன்றுமில்லை இவ்வுலகில்.
*ஒவ்வொரு சோகமும், துன்பமும் வாழ்க்கையில் நல்ல பாடத்தை கற்று தரவே வருகின்றது.*

 யாரும் உன் கண்ணீரை பார்ப்பதில்லை.
யாரும் உன் கவலைகளை பார்ப்பதில்லை.
யாரும் உன் வலிகளை பார்ப்பதில்லை.
*ஆனால் எல்லோரும் உன் தவறை மட்டும் பார்ப்பார்கள்.*

மனிதனும் வாழை மரமும் ஒன்று தான்.
தேவைப்படும் வரை வைத்திருப்பார்கள்.
*தேவை முடிந்தவுடன் வெட்டி வீசி விடுவார்கள்.

17/09/2020

காய்கறிக் குறள்

✍️ *காய்கறிக் குறள்*

*தக்காளி எப்போதும் உட்கொண்டால் தரணியில் எக்காலும் நோயில்லை காண்.*

*எலுமிச்சை புளித்தாலும் எடுத்ததை உட்கொள்ள எலும்புக்கு வலு சேர்க்குமே*

*வெங்காயம் இல்லாச் சாம்பார் எஞ்ஞான்றும் தங்காதே நாவில் ருசி.*

*பொல்லாத பேரையும் நல்லவ ராக்கும் புடலங்காய் போற்றிச் சுவை.*

*தள்ளாத வயதிலும் உள்ளே தள்ளுவாய் முள்ளங்கி மூன்றினைத் தினமும்*. 

*வெண்டைக்காய் இருக்கையில் சுண்டை எந்நாளும் தொண்டையில் இறங்காது காண்.*

*வள்ளிக் கிழங்குண்ணார் வையத்தில் வாழ்ந்தும் வாழாதார் என்பது வழக்கு*.   

*கத்தரி உண்பாரே உண்பார் மற்றெல்லாம் இத்தரையில பித்தருக்குச் சமமெனக்கொள்.*

*பூசணியைச் சேர்த்தாரே புண்ணியர் பூவுலகில் புகழோடு வாழ்வார் அவர்* .

*காய்கறியைத் தின்னாதார் வாழ்க்கை எப்போதும் நோய்நொடியில் வீழ்ந்து கெடும்.*

*முருங்கைக்காய் ருசித்தாரே ருசித்தார் மற்றோரெல்லாம் வெறுங்கையில் முழம் போடுவர்*

*காரிருளில் கண்தெரிய வேண்டுமெனில் பாரிலுள்ள கரிசலாங் கண்ணியைச் சேர்.*

*இரும்பைப் போல் இதயமது வேண்டுமெனில் கரும்பைப் போய் விரும்பிச்சுவை* 

*உரிக்க உரிக்கத் தோல்தான் வெங்காயம் என்றாலும் செரிக்குமோ உரிக்காவிடில்.*

*பறித்த உடன் உண்ணுவீர் பரங்கியை எப்போதும் பலனது வேண்டுமெனில்.*

*பாகற்காய் கசக்கும் என்பதால் சீண்டாதார் சோகத்தில் சேர்ந்து விழுவர்*.

*வெல்லத்தில் இரும்புண்டு ஆகையினால் சாப்பாட்டில் ஒரு துண்டு சேர்த்துச்சமை.* 

*வாழ்வதனால் ஆய பயனென்கொல் வாழைக்காய் தாழ்வெனெவே எண்ணு பவர்.*

*கேரட்டைச் சேர்க்காத சமையல் கிணற்றுக்குள் தேரை வாழ்ந்த கதை*

*பீடுநடை போடுதல் வேண்டுமெனின் தினமும் பீட்ரூட்டை உணவில் சமை*.

*கொத்தவரை பீன்ஸ் முட்டைகோஸ் எல்லாமே சத்தே எனவே சரியாய் உணர்* 

*கறிவேப்பிலை மல்லி கடுகு சேராதோர் சொறி பிடித்தோடுவார் காண்.*

*பொன்னிற மேனி வேண்டுமெனில் நீயந்த பொன்னாங் கண்ணியைச் சேர்* 

*கண் இருந்தும் குருடரே காசினியில்*
*காய் கறியை உண்ணாதவர்.*      

🎊💎🎊🌟🎊💎🎊

27/06/2020

சாதிக்க

எதையும் சாதிக்க விரும்பும் மனிதனுக்கு ‘ நிதானம் ' தான் அற்புதமான ஆயுதமே தவிர , ' கோபம் ' அல்ல ...

ஒரு சிலவற்றை ஆராய்ந்து மனதை காயப்படுத்தி கொள்வதை விட ,..

 அனைத்தும் நமக்கான பாடம் என்று அதை அனுபவமாய் எடுத்து கொள்ளுங்கள் .. வாழ்க்கை சிறக்கும் !

கவலைகள் ஒரு போதும் வெற்றியை தருவதில்லை .... முயற்சிகளே ..

22/05/2020

வாழ்க்கையில் உயர

உயரத்தில் செல்ல உயரத்தில் உள்ளவர்களை உற்றுநோக்குங்கள்...

இன்னும் உயர வேண்டும் என்ற எண்ணம் வரும்...🤝

உயரத்திற்கு சென்ற பின் தாழ்வில் உள்ளவரை உற்று நோக்குங்கள்...

நாமும் இங்கிருந்து தான் உயர்ந்தோம் என்பது நினைவில் வரும்...😌

கடன் கொடுக்கும் போது  சாட்சி சொல்ல சிலர் இருப்பது  நல்லது! 

ஆனா தருமம் செய்யும் போதோ அருகில் யாருமே இல்லாமல்
இருப்பது நல்லது... 

ஏனென்றால் நாம் செய்கிற விஷயத்தில் நல்லது இருந்தால் போதும் நாம் தேவையில்லை...

👍இந்நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்...💐

💐இனிய காலை வணக்கம்... 🙏

நம் பயணம்

இருள் என்று தெரிந்தும், 
கண்களை திறந்து கொண்டு தான் 
பயணிக்கிறோம்... 

அது போல தோல்வி என்று தெரிந்தாலும் 
முயற்சி செய்து கொண்டு இருப்போம் 
வெற்றி காணும் வரை... 

இனிய காலை வணக்கங்கள் பல

19/05/2020

சிறிய புன்னகை

வெற்றியோ தோல்வியோ 
இன்பமோ துன்பமோ ... 
எப்பொழுதும் உதட்டில் சிறு 
புன்னகையுடன் இருங்கள்...‪‪‬‪‬‪‬‪‬‪‬‪‬‪‬‪‬‪‬‪‬‪‬‪‬‪‬‪‬‪‬‪‬‪‬‪‬‪‬‪‬‪‬‪‬‪‬‪‬‪‬‪‬‪‬‪‬‪‬‪‬‪‬‪‬‪‬‪‬‪‬‪‬‪‬‪‬‪‬‪‬‪‬‪‬‪‬‪‬‪‬‪‬‪‬‪‬‪‬‪‬‪‬‪‬‪‬‪‬‪ 
மனிதனாய் பிறப்பது பெரிதல்ல, 
மனிதநேயத்துடன் வாழ்வது 
தான் சிறந்தது...‪‬‪‬‪‬‪‬‪‬‪‬‪‬‪‬‪‬‪‬‪‬ 
இனிய நற்காலை வணக்கம்

16/05/2020

காலை வணக்கம்

அழகை நேசித்தவன், அறிவை இழக்கிறான். 
பணத்தை நேசித்தவன், பாசத்தை இழக்கிறான். 
குணத்தை நேசித்தவன் ...கோபுரமாகிறான் 
அன்பான காலை வணக்கம்... வாழ்க வளமுடன்

14/05/2020

காலை வணக்கம்

உற்சாகத்தோடு யாரும் பிறப்பதில்லை... 
உற்சாகத்தைத் தன்னுடைய இயல்பாக 
ஆக்கிக் கொள்பவர்களே உயர்கிறார்கள்... 
அழகிய புன்னகையுடன் பூத்து புலர்ந்திருக்கும் 
புதிய நாளின் 
இனிய நற்காலை வணக்கத்தின் நல்வாழ்த்துக்கள்.

05/04/2020

நல்லதே நினை நல்லதே நடக்கும். வளமுடன் வாழ்வோம்

*மகிழ்ச்சி....*

வேலை....
வேலை....
வேலை....

என....

பணம் என்ற காகிதத்தை சேர்க்க ஓடி ஓடி ....

அன்பை மறந்து....
ஆசைகளை மறந்து....
மனசாட்சியை மறந்து.....

எப்போது பார்த்தாலும்....
கடை....
கடை....
கடை..... 

என....

வாழ்க்கைக்கு தேவையானவற்றை தேடாமல்....

பணத்தை மட்டுமே தேடி.....

அதனால் கிடைக்கும் அந்தஸ்தை தேடி....

பேர்....
புகழ்....
கெளரவம்....
பெருமை....

என .....

எல்லாவற்றையும்
தேடி...
ஓடி.....

உள் மனதின் சந்தோஷத்திற்காக.....

செயற்கையான செய்கைகளை செய்து....

அதில் மகிழ்வது போல நடித்து....

நாலு பேருக்கு முன்னால்
நல்லாருக்க வேணும்னு கஷ்டப்பட்டு....
கசங்கி....
நற்பெயர் எடுத்து....

பாருங்க....
இப்ப என்னாச்சுன்னு....

எதுவுமே நம்மகூட
இல்லையே.....

தனித்தனியா இருக்கச்சொல்றாங்க.....

மூணு வேளை சாப்பாடு கிடைச்சா போதும்கிற நிலைமை....

யாருக்காக சம்பாதிச்சமோ....

அவங்க எல்லாரும் தனித்தனியா...

ஆளுக்கொரு ஊர்ல...

ரொம்ப தூரத்துல....

கண்ணுக்கெட்டிய தூரத்துல கூட இல்லாம....

கூப்புடு தூரத்துல கூட இல்லாம....

என்னதங்க சாதிச்சோம்?

இவ்வளவு பணமும்....

வசதியும்....

பெருமையும்....

புகழும்....

கெளரவமும்....

அகம்பாவமும்....

செல்வச்செழுமையும்.....

கார்...

பங்களா....

சுத்தி சுத்தி இடங்கள்....

தொழில்நுட்ப வசதிகள்....

இன்டர்நெட்....

மொபைல்....

இன்ஸ்டாகிராம்.....

எல்லாம் இருந்தும்....

நம் ரத்த சொந்தங்கள்....

ரத்த நாளங்கள்....

நம் உயிரான பந்தங்கள் ....

ஆளாளுக்கு ஒரு இடத்தில்....

மாதக்கணக்கில்
விடுமுறை....

எந்த பிரயோஜனமும் இல்லாமல்....

கவலை தோய்ந்த முகங்களோடு....

கொஞ்சமாவா ஆடி இருப்போம்....

எல்லாவற்றிற்க்கும் சேர்த்து ஒட்டுமொத்த அடி....

அனுபவிச்சே ஆகனும்....

ஊரடங்கு எப்போது முடியும்....

அதற்குள் யார் யாரெல்லாம் அடங்குகிறார்கள்....
யாருக்கும் தெரியாது....

தெரியவும் வேண்டாம்....

கொரோனா....

இது வைரஸ் அல்ல....

நம்மிடம் குடிகொண்டிருக்கும் தேவையற்ற நோய்களான....

புகழ்...
பெருமை....
அந்தஸ்து....
கெளரவம்....
பதவி....

இவை அனைத்தையும் மருந்தே உட்கொள்ளாமல்....

கொரோனா என்ற
ஒற்றை சொல்லின்
பயத்தால் மட்டுமே நமக்கு நாமே சரிசெய்து கொண்டு....

மீண்டும் புது மனிதனாக....

மனசாட்சியுள்ள
மனிதனாக....

மனித நேயம் உள்ள மனிதனாக...

ஒழுக்கம்...
நேர்மை...
பண்பு...
பணிவு....

இவைகளை மதித்து...

எதிரேவரும் மனிதனை....

மனிதனாக மதித்து....

ஒருவருக்கொருவர் அன்போடும்...
ஆதரவோடும்....

உண்மையாக பேசி....
உண்மையை பேசி....

மனதால் மகிழ்ந்து....

சுகத்தில் மகிழ்ந்து...

கஷ்டத்தில்
ஆதரவளித்து....

பெற்றோரை வணங்கி....

மனைவி மக்களோடு பேசி சிரித்து உறவாடி...

கிடைத்ததை கொண்டு வாழ்க்கையை....

அழகாக வாழ்ந்து....

அற்புதமாக
இறப்போமா....

சரி என்பவர்களுக்கு....

கொரரோனாவால்....

நிச்சயம் பாதிப்பில்லை....

நம்மை...
நம்வாழ்க்கை முறையை....
நம் பண்டைய நெறியை....
நம் பண்பாட்டை...
நம் வாழ்வியலை....

நாம் திருத்திக்கொள்ள...
திருந்தி வாழ....

நமக்கு அளிக்கப்பட்டுள்ள
வாய்ப்பே....

*கொரோனா....*

*திருந்தி வாழலாமா*
*இறைவன் துணையோடு*
*நண்பர்களே....*

*சபதமெடுப்போம்...*

*நல்லதே நினை நல்லதே நடக்கும். வளமுடன் வாழ்வோம்*

21/03/2020

கொரோணா Corona Covid 19

ஊஹானில் பிறந்தாய்!!! 
உறவாடி நுழைந்தாய்!!! 

உறக்கம் கலைத்தாய்!! 
உயிரை உறிஞ்சுகிறாய்!!! 

முழித்து முழித்து விழிக்கிறோம்..
விழித்து விழித்து முழிக்கிறோம் 
விடையொன்றும் அறியாமல்!!! 

ஒற்றைத் தும்மல் இருமலில்..
கடவுச்சீட்டு எதுவுமின்றி,
கண்டம் விட்டு கண்டம் பறக்கிறாய்!!! 
உல்லாசமாய் உலவுகிறாய்!!! 
உணர்வின்றி புலம்புகிறோம்!!! 

சனமற்ற சாலைகள்...
சலனமற்ற வீதிகள்..
முகமூடி மனிதர்கள்.. 
காலியாய் கடைகள்.. 
அடைக்கப்பட்ட அலுவலகங்கள்... 
சிரிப்பில்லா சிறுவர் பூங்கா.. 
ஆளில்லா விமானங்கள்
அறவமற்ற அங்காடிகள்.. 

பாதாளம் போன பங்குச் சந்தைகள்...
கரைந்து போன கரன்சிகள்... 
சல்லியாய்ப் போன மில்லியனர்கள்.. 
உருகிப்போன தங்கங்கள்..
உறைந்து போன  வல்லரசுகள்..

அருவமும் உருவமுமிலா நிலை நிற்கின்றாய்!!!
ஆனாலும் அடிமனதில் விஸ்வரூபம் எடுக்கின்றாய்!!! 

ஆலயங்களில் அர்ச்சனை, துவா, மன்றாடல் இல்லை!!

மணியோசை 
பாங்கோசை கேட்கவில்லை!!! 

கேளிக்கை கொண்டாட்டங்கள்  இல்லை!!! 

மதங்களுக்கும், கொள்கைகளுமாய்  
மதியிழந்து 
வெட்டிப் பேச்சும்  வீண் சண்டையுமாய் விரயமாய்ப் போனது வாழ்க்கை!!! 

மூச்சை முடக்கினாய்!!! 
ஆணவம் அடக்கினாய்!!! 

மூச்சு இருந்தால் தானே பேச்சு ?

எவர் மூச்சில் நீ எம்முள் நுழைவாயோ என்கின்ற அச்சத்தில்.. 
பூட்டிய கதவுகளுக்குள்ளிருந்து,
புலம்பித் தவிக்கிறோம்!! திறந்த மனதோடு அச்சத்தில்  இறைஞ்சுகிறோம்!!! 

நீ யார்? எதற்காக வந்தாய்?
நீ சென்று விடு , எங்களை விட்டு விடு!!! 

காடழித்து நாடு கொண்டோம்!! 
வீறு கொண்டு வெகுண்டழித்"தீ"ய்!!! 

மரமழித்து, மலையழித்து மாளிகை கட்டினோம்!! 
எரிமலையாய் எதிர்த்தடித்தாய்!! 

ஆறு, ஏரி, குளம் அழித்தோம்!!!
ஆழிப்பேரலையாய் அவதரித்தாய்!!! 

விலங்கினத்தையேனும்  விட்டுவைத்தோமா?
வேட்டையாடி கொ(தி)ன்று குவித்தோம்!! 

அவைதம் அலறல், கதறல் கேட்டு அடித்தொழிக்க  வந்தாயோ?

எரிமலை எரிதழல் எம்மைச் சீண்டவில்லை என்கின்ற காரணத்தால்...  ஆழிப்பேரலையை அலட்சியமாய்க் கடந்தோம் என்கின்ற காரணத்தால்,
எப்படிப் புகட்டியும் எமக்கு உரைக்கா காரணத்தால்.. 

ஆறாம் அறிவிற்கு, மாறா-மறவாப் பாடம் புகட்ட.. 
"கரோனா" வடிவில்
களமிறங்கி ஆடுகிறாய்.. கண்டங்களைச் சுழற்றுகிறாய்?? 

மடி கணினியும்,  கை பேசியுமாய்.. 
நிற்க நேரமின்றி நிமிர விருப்பமின்றி.. 
ஓடிய நாங்கள் உருக் குலைந்து நிற்கிறோம்!!! 

யோசிக்கிறோம்!!!! 
நேசிக்கிறோம்!!! 

கணக்கும் பிணக்குமாய் பிளவுண்ட குடும்பங்கள் 
பிணைந்திணைந்து நிற்கின்றன!!! 

ஒத்துவராதென்று ஒதுங்கிய ஒதுக்கிய உள்ளங்கள் - இன்று அடுத்தவர் பக்க நியாயங்களை அலசி ஆய்ந்து பார்க்கின்றன!!! 

நிற்க நேரமின்றி ஓடியபின்....
கற்க நிறைய இருக்கிறது என்பதைக் கற்றுக் கொண்டோம்!!!

ஆன்லைனில் ஆஃபர் ஆப்பம் ஆர்டரில்லை!! ஆட்டாங்கல் சட்னி தொட்டு,  ஆவி பறக்க அவித்த இட்லி ஆசை ஆசையாய் உண்கிறோம்!! 

உடற்பயிற்சி  செய்கிறோம்!!
உறவாடி மகிழ்கிறோம்!!!

கூட்டாஞ்சோறு ஆக்குகிறோம்!!! 
கூடி ஒன்றாய் உண்கிறோம்!!!

அப்பா அம்மாவோடு அந்தாக்ஷரி ஆடுகிறோம்!!!

பாட்டி கதை கேட்கிறோம்!!!
பரமார்த்தமாய் இருக்கிறோம்!!!

வானம்பாடியாய் ஆடிப் பாடி பறக்கிறோம்...
ஆனந்தமாய் இருக்கிறோம்!!! 

சின்னஞ்சிறு கதைகள் பேசுகிறோம்!!!
சிரித்து மகிழ்ந்து இருக்கிறோம்!! 

ஒரு ஒரு சுவாசத்தையும் உணர்ந்துணர்ந்து உள்ளிழுக்கிறோம்!!

நாசியில் நுழையும் மாசிலா மூச்சுக் காற்றை நன்றியோடு  நினைக்கிறோம்!! 

இது தானே நீ விரும்பியது ?

மனமுருகி மன்றாடுகிறோம்!!! 
இறைஞ்சிக் கேட்கிறோம்!! 
எம்மை இப்படியே இருக்கவிடு!!! 

இனி நீ மௌனமாய் சென்று விடு .🙏 🙏 🙏

02/03/2020

அப்பா

* அப்பா ஏன் எப்போதும் பின்தங்கியிருக்கிறார் என்று தெரியவில்லை *

 1. அம்மா 9 மாதங்கள் சுமக்கிறார், அப்பா 25 வருடங்கள் சுமக்கிறார், இருவரும் சமம், அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.

 2. அம்மா குடும்பத்திற்கு ஊதியம் இல்லாமல் வேலை செய்கிறார், அப்பா தனது சம்பளத்தை குடும்பத்திற்காக செலவிடுகிறார், அவர்களின் முயற்சிகள் இரண்டும் சமம், அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.

 3. அம்மா நீங்கள் விரும்பியதை சமைக்கிறார், அப்பா நீங்கள் விரும்பியதை வாங்குகிறார், அவர்களின் காதல் இரண்டும் சமம், ஆனால் அம்மாவின் காதல் உயர்ந்ததாக காட்டப்படுகிறது.  அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று தெரியவில்லை.

 4. நீங்கள் தொலைபேசியில் பேசும்போது, ​​முதலில் அம்மாவுடன் பேச விரும்புகிறீர்கள், உங்களுக்கு காயம் ஏற்பட்டால், நீங்கள் ‘அம்மா’ என்று அழுகிறீர்கள்.  உங்களுக்குத் தேவைப்படும்போது மட்டுமே நீங்கள் அப்பாவை நினைவில் கொள்வீர்கள், ஆனால் மற்ற நேரங்களில் நீங்கள் அவரை நினைவில் கொள்ளவில்லை என்று அப்பா ஒருபோதும் மோசமாக உணரவில்லையா?  குழந்தைகளிடமிருந்து அன்பைப் பெறும்போது, ​​தலைமுறைகளாக, அப்பா எப்போதும் பின்தங்கியிருப்பதைக் காண்கிறோம்.

 5. அலமாரியில் வண்ணமயமான புடவைகள் மற்றும் குழந்தைகளுக்கான பல ஆடைகள் நிரப்பப்படும், ஆனால் அப்பாவின் உடைகள் மிகக் குறைவு, அவர் தனது சொந்த தேவைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை, அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.

 6. அம்மாவிடம் பல தங்க ஆபரணங்கள் உள்ளன, ஆனால் அப்பா தனது திருமணத்தின் போது வழங்கப்பட்ட ஒரே ஒரு மோதிரத்தை மட்டுமே வைத்திருக்கிறார்.  இன்னும் அம்மா குறைந்த நகைகள் புகார் மற்றும் அப்பா இல்லை.  அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்பது இன்னும் தெரியவில்லை.

 7. குடும்பத்தை கவனித்துக்கொள்வதற்காக அப்பா தனது வாழ்நாள் முழுவதும் மிகவும் கடினமாக உழைக்கிறார், ஆனால் அங்கீகாரத்தைப் பெறும்போது, ​​அவர் எப்போதும் பின்தங்கியிருப்பார்.

 8. அம்மா கூறுகிறார், நாங்கள் இந்த மாதம் கல்லூரி டியூஷன் செலுத்த வேண்டும், தயவுசெய்து திருவிழாவிற்கு எனக்காக ஒரு சேலை வாங்க வேண்டாம், அதே நேரத்தில் அப்பா புதிய ஆடைகளைப் பற்றி கூட யோசிக்கவில்லை. அவர்களின் காதல் சமம், அப்பா ஏன் என்று இன்னும் தெரியவில்லை  பின் தங்கி.

 9. பெற்றோர் வயதாகும்போது, ​​குழந்தைகள் சொல்கிறார்கள், வீட்டு வேலைகளை கவனித்துக்கொள்வதில் அம்மா குறைந்தது பயனுள்ளதாக இருக்கும், ஆனால் அவர்கள் சொல்கிறார்கள், அப்பா பயனற்றவர்.

 அப்பா * பின்னால் இருக்கிறார் (அல்லது ‘பின்னால்’) * ஏனெனில் அவர் குடும்பத்தின் முதுகெலும்பாக இருக்கிறார்.  அவர் காரணமாக, நாம் நிமிர்ந்து நிற்க முடிகிறது.  அநேகமாக, அவர் * பின்தங்கியிருப்பதற்கான காரணம் இதுதான்.

 இந்த இடுகையுடன் எத்தனை பேர் தொடர்புபடுத்துவார்கள், இதை ஒப்புக்கொள்வார்கள் என்று தெரியவில்லை .......

31/01/2020

நம்பிக்கை தரும் வரிகள்

கடைபிடிக்க வேண்டிய  
நம்பிக்கை தரும் வரிகள்

ஒற்றைக்காலில் நின்று 
தவம் செய்தாலும் 
மீன் கிடைக்கும்
 வரையில் முயற்சியை 
கைவிடாத 
வெண்கொக்கு!

ஆயிரக் கணக்கினில் 
அடி வாங்கினாலும் 
சிலையாகும் வரையில் 
உளியை உறவாக 
எண்ணும் கருங்கல்!

கால்களில்லாத போதிலும் 
பாறைகளில் மோதியும் 
படுகுழியில் விழுந்து 
கடலைச் சேரும்
 குறிக்கோள்களை
 கடத்திவிடாத நதி!

கைகளை
 துண்டித்தாலும்
 தலையைத் தறித்தாலும் 
நிழல் பரப்பும் 
எண்ணத்தில் மீண்டும்
 தழைக்கின்ற மரம்!

இரும்பு முள்ளில்
 குத்தினாலும்
 ரணத்தையும் கூட 
ரசித்துக்கொண்டே 
வண்டியிழுக்கும்
 எருதுகள்!

கனவு
 நிறைவேறும்வரை 
கலைத்து விடாதே 
முயற்சியை ஏனெனில்..

முயற்சி மட்டுமே
 முன்னேற்ற
 மாளிகைக்கு
 முதலிடமாகும்!

வெற்றிப்பாதை!!

உருக்கப்படும்
 தங்கம் தான்
 உரு மாறி
 நகையாகிறது!

அறுக்கப்படும் 
மரம் தான் 
அழகான
 ஜன்னலாகிறது!

இடிக்கப்படும்
 நெல் தான்
 உமி நீங்கி
 அரிசியாகிறது!

துவைக்கப்படும் 
துணி தான்
 தூய்மை பெற்று
 வெண்மையாகிறது!

ஏற்றப்படும் விளக்குதான் 
இருள் நீக்கி 
ஒளி தருகிறது!

தட்டப்படும் தந்தி தான்
 தம்புராவில் 
இசை தருகிறது!

செதுக்கப்படும் 
பளிங்கு தான் 
செம்மை பெற்றுச் 
சிலையாகிறது!

பதப்படுத்தப்படும் 
தோல் தான் பயனுள்ள 
காலணியாகிறது!

மிதிக்கப்படும் மண் 
தான் மிருதுவான 
பானையாகிறது!

புதைக்கப்படும் விதை 
தான் மண்ணை விட்டு 
மரமாக எழுகிறது!

தோற்றுப்போகும் 
மனிதன் தான் துணிவு 
பெற்று வீரனாகிறான்!

தொடர்ந்து முயலும் 
வீரன் தான் சரித்திரம் 
படைத்தது வாழ்கிறான்!

26/01/2020

சுதந்திர தினம் & குடியரசு தினம்

*சுதந்திர தினத்திற்கும் குடியரசு தினத்தன்றும் கொடி ஏற்றுவதில் உள்ள வேறுபாடுகள்.......*

*# முதல் வித்தியாசம்......*

பதினைந்து ஆகஸ்ட் சுதந்திர தினத்தன்று கொடி  ஏற்றும்போது கொடி கீழிருந்து மேலே கயிற்றால்  இழுத்து பிறகு கட்டப்பட்டுள்ள கொடி திறக்கப்பட்டு பறக்கவிடப்படும் அன்றைய தினத்திற்கு மரியாதை செய்யும் விதமாக செய்யப்படும் இந்த நிகழ்வுக்கு "கொடியேற்றம்" அதாவது Flag hoisting என்றழைக்கபடுகிறது.,

இருபத்து ஆறு ஜனவரி மாதம் குடியரசு தினத்தன்று
கொடி கம்பத்தின் உச்சியிலே கட்டப்பட்டு இருக்கும். அந்த முடிச்சு அவிழ்க்கப்பட்டு அதாவது கொடி  திறக்கப்பட்டு பறக்கவிடப்படும்  இதை கொடியை பறக்கவிடுதல்  அதாவது flag unfurling என்பார்கள்..

*#இரண்டாவது   வித்தியாசம்......*

சுதந்திரம் கிடைத்தபோது அரசியல் சட்டம் அமுலுக்கு வரவில்லை. அப்பொழுது பிரதமர் தான் நாட்டில் முதல் மனிதராக political head  கருதப்பட்டார். குடியரசு தலைவர் ஒரு constitutional monarchy, அவர் அப்போது பதவி பிரமாணம் எடுத்துக்கொள்ளவில்லை. இதனால் சுதந்திர தினத்தில் பிரதமர்  கொடி ஏற்றுகிறார். குடியரசு தலைவர் மாலையில் ரேடியோ தொலைக்காட்சி மூலமாக உரையாற்றுவார்..

குடியரசு தினத்தன்று அரசியல் சட்டம் அமுலுக்கு வந்தபடியால்  அரசியல் சட்டத்தின் தலைவர் மற்றும் பாதுகாவலர் என்ற முறையில் குடியரசு தலைவர் கொடியை பறக்கவிடுவார்..

*# மூன்றாம் வித்தியாசம்.......*

சுதந்திர தினத்தன்று டில்லி செங்கோட்டையில் கொடி ஏற்றபடுகிறது

குடியரசு தினத்தன்று டில்லி ராஜ்  பாத்தில் கொடி பறக்கவிடப்படுகிறது......