23/03/2019

பிரச்சனையும் ஒட்டகமும்

🐪 *நூறு ஒட்டகங்கள்...*🐪

"ஓடிக்கொண்டே இருக்கிறேன்..

பல பிரச்சனைகள்.

வீட்டில், தெருவில், ஊரில், வேலை செய்யும் இடத்தில் என எங்குமே பிரச்சனைகள்..

தூங்கமுடியவில்லை..

எனக்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்"

என்றவாறே  முனிவரின் முன்பாக நின்றிருந்தான் அவன்.

அப்போது மாலை நேரம்.

முனிவர் அவனிடம்  "தோட்டத்திற்கு சென்று ஒட்டகங்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றன என பார்த்துவிட்டு வா" என்றார்....

சென்றவன் திரும்பி வந்து , "100 ஒட்டகங்களும் நின்றுகொண்டு இருக்கின்றன" என்றான்....

"நல்லது. அந்த 100 ஒட்டகங்களும் தரையில் படுத்தவுடன் அங்கே இருக்கிற ஓய்வறையில் நீ படுத்து தூங்கிவிட்டு காலையில் திரும்பி வா.. " என்றார்..

"சரி அய்யா" என்றவாறு தோட்டத்திற்கு போனவன் கண்களில் தூக்கமின்றி களைப்புடன் காலையில் திரும்பி வந்து "அய்யா.. இரவு முழுவதும் தூங்கவே இல்லை .. " என்றான்..

"என்ன ஆச்சு?" என்றார் முனிவர்..

"சில ஒட்டகங்கள் தானாகவே தரையில் படுத்துவிட்டன..

சில ஒட்டகங்களை நான் மெனக்கெட்டு படுக்கவைத்தேன்.

ஆனால் அனைத்து ஒட்டகத்தையும் படுக்கவைக்க முடியவில்லை.

சிலது படுத்தால் சிலது எழுந்து கொள்கின்றன..

அனைத்து ஒட்டகத்தையும் ஒட்டுமொத்தமாக படுக்கவைக்க முடியவில்லை. அதனால நான் தூங்குவதற்கு  போகவே இல்லை" என்றான்.

முனிவர் சிரித்தபடியே "இதுதான் வாழ்க்கை.. வாழ்க்கையில் பிரச்சனையை முடிப்பது என்பது ஒட்டகத்தை படுக்க வைப்பது போன்றது..

சில பிரச்சனைகள் தானாக முடிந்துவிடும்.. சிலவற்றை நாம் மெனக்கெட்டு முடித்துவிடலாம்.. ஆனால் சில பிரச்சனைகள் முடிந்தால் வேறு சில பிரச்சனைகள் புதிகாக எழலாம்...

அனைத்து பிரச்சனையும் முடிந்தால்தான் நிம்மதியாக தூங்குவேன் என்றால் இந்த உலகத்தில் யாராலும் தூங்கமுடியாது..

பிரச்சனைகள் அனைத்தும் எப்போது முடியும் என கவலைப்பட்டுக் கொண்டே இருக்காதே..

தீர்க்கமுடிந்தவற்றை தீர்த்துவிட்டு, மற்றவற்றை காலத்தின் கைகளில் ஒப்படைத்துவிட்டு உனக்கான ஓய்வறையில் நிம்மதியாக இருக்க கற்றுக்கொள் " என்றார்..

முனிவரை வணங்கிவிட்டு சென்றவன் சிலநாள் கழித்துவந்து முனிவரிடம்  "சில ஒட்டகங்கள் படுக்கவில்லை என்றாலும் நான் நிம்மதியாக படுத்து உறங்குகிறேன்.." என்றான்.

வாழ்வில் பிரச்சனைகள் என்பது நூறு ஒட்டகங்கள் போன்றது...

அனைத்தும் ஒரே நேரத்தில் படுப்பதற்கான வாய்ப்பு குறைவே..

ஒவ்வொன்றும் படுப்பதற்கான காலம் உள்ளது...

அப்படியே நமக்கான பிரச்சனைகள் தீர்வதற்கான காலமும் உள்ளது.. 

*ஆகவே சிலவற்றை காலத்தின் கரங்களில் ஒப்படைத்துவிட்டு, வாழ்வை அமைதியாக அனுபவிப்போம்...*

21/03/2019

இந்து சமய நூல்

ஒரே ஒரு பைபிளை வைத்துக் கொண்டு 100 நாடுகளை கிறிஸ்தவம் ஆட்சி செய்கின்றது;10,00,000 ஆன்மீக நூல்களைக் கொண்டிருக்கும் நாம் ஏன் உலகத்தை ஆளக் கூடாது?

சித்தர்கள்,ரிஷிகள்,முனிவர்கள்,ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்கள் எழுதியுள்ள நூல்களில் மிக முக்கியமானவைகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம்;

1.ஸ்ரீமத் பகவத் கீதை

2.இராமாயணம்

3.மஹாபாரதம்

4.சிலப்பதிகாரம்

5.சீவக சிந்தாமணி

6.குண்டலகேசி

7.வளையாபதி

8.தொல்காப்பியம்

9.சிவபுராணம்

10.விஷ்ணு புராணம்

11.கருட புராணம்

12.தேவி பாகவதம்

13.விதுர நீதி

14.சுக்கிர நீதி

15.திருக்குறள்

16.திருமந்திரம்

17.சிவ கீதை

18.அக்னி புராணம்

19.மந்திர ராஜ பதப் பிரயோகம்

20.சிவ பராக்கிரமம்=யாழ்ப்பாணம் வெளியீடு

21.தனுர் வேதம்

22.ரிக் வேதம்

23.யஜீர் வேதம்

24.சாம வேதம்

25.அதர்வண வேதம்

26.நந்திக் கலம்பகம்

27.நந்தி புராணம்

28.பன்னிரு திருமுறைகள்

29.திருவெம்பாவை

30.திருப்பாவை

31.பாசுரங்கள்

32.சைவ சமய ஆகமங்கள்

33.ஆர்ய பட்டீயம்

34.பாஸ்கர கணிதம்

35.திருவிளையாடல் புராணம்

36.அபிராமி அந்தாதி

37.திருப்புகழ்

38.எட்டுத் தொகை

39.பத்துப் பாட்டு

40.கந்தர் கலிவெண்பா

41.கந்தரலங்காரம்

42.கந்த சஷ்டிக் கவசம்

43.ஆனந்த காந்தம்

44.கேனோப உபநிஷத்

45.முண்டக உபநிஷத்

46.மீமாம்ஸம்

47.பைரவ கல்பம்

48.வராகி கல்பம்

49.சிவ கல்பம்

50.நாராயண சூக்தம்

52.சிதம்பர சூத்திரம்

53.ருத்ராட்ச கல்பம்

54..வில்வ கல்பம்

55.பரிபாடல்

56.சூரிய புராணம்

57.குரு கீதை

58.ஸ்ரீவித்யா ரகசியம்

59.கோ உபநிஷத்

60.வனவியாசம் என்ற விருட்ச சாஸ்திரம்

61.மஹா சாஸ்த கல்பம்

62.பைரவர் இருபத்தைந்து

63.மண் ஜீஸ்வரி மூல கல்பம்

64.பதார்த்த குண சிந்தாமணி(என்ன நோய்க்கு என்ன உணவு தயாரிகக வேண்டும்;எப்போது எப்படி சாப்பிட வேண்டும் என்ற விளக்கம்)

65,பதார்த்த குண விளக்கம்

66,யாதார்த்த குண விளக்கம்

67.ப்ரபோத சந்த்ரோதயம்(காபாலிக வழிபாடு பற்றிய விளக்கம்)

68.ஷட் சக்கர நிரூபணா

69.ப்ரதீபிகை

70.உத்திர காலாம்ருதம்

71.த்ரோடல உத்திர தந்திரம்

72.காமகலா விலாஸினி தந்திரம்(ஒன்பது சக்கரங்கள் பற்றியும்,அதனுள் இருந்தபடி நம்மை ஆட்சி புரியும் பெண் தெய்வீக சக்திகள் பற்றியும் விளக்கம்)

73.தமிழ்நாட்டில் 45,000 ஆலயங்கள் உள்ளன;ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு ஸ்தல புராணம் இருக்கின்றது;

இன்னும் ஏராளமாக இருக்கின்றன; 🙏🏻🌾🙏🏻

அனைவரும் பகிர்ந்து நமது குல பெருமைக்குரிய தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம் 🌱

கணவன் தேடிய மனைவி

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல நீதிக் கதை..☺😊

ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.

கணவர்என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!
வையத்தியரும் சொன்னதில்லை!
மனைவியின் வேலை, அலைந்து திரிந்து வரும் கணவருக்கு உணவு சமைத்து வைப்பது, பரிமாறுவது, கைகால்கள் அமுக்குவது போன்ற பணிவிடைகள் தான்!.. இப்படியே பல ஆண்டுகள் கழிந்து இருவருமே வயதாகி விட்டனர். ஆனாலும் தேடுவதை நிறுத்தவில்லை..!

ஒருநாள் வைத்தியர் வழக்கம் போல காட்டுக்குள் அலைந்து திரிந்து விட்டு வரும்போது அங்கே மனைவியைக்
காணவில்லை...
மாறாக இளம்பெண் ஒருத்தி நின்று கொண்டிருந்தாள்...
வையித்திரை பார்த்ததும் சாஸ்டாங்கமாக விழுந்து சேவித்தாள். வைத்தியருக்கு ஒன்றும் புரியவில்லை...
"யாரம்மா நீ " என்று கேட்டார்.
அதற்கு அந்த யுவதி "நான்தான் உங்கள் மனைவி.." என்றாள்.

வைத்தியருக்கு மிகவும் குழப்பம்.
என்ன நடந்தது என்று கேட்க, மனைவி நடந்ததை சொல்ல ஆரம்பித்தாள்....
"  உங்களுக்காக கூழ் காய்த்து கொண்டிருந்தேன். காய்ச்சிய கூழை கலக்கும் கரண்டி உடைந்து விட்டது. அதனால் அங்கே கிடந்த ஒரு குச்சியை எடுத்து கலக்கினேன். கூழ் மொத்தமும் கருப்பாகி விட்டது. அந்த கூழை இறக்கி வைத்து விட்டு வேறு கூழ் காய்ச்சினேன். நீங்கள் வர தாமதமானதும் கருகி கிடந்த கூழை நான் குடித்து விட்டேன். குடித்த அரை நாழிகையில் எனது முதுமை போய் இப்படி இளைம் பெண் ஆகிவிட்டேன்" ..என்றாள்

வைத்தியர் பதறி அடித்துபோய் " எங்கே அந்த குச்சி? இதை தானே நான் இத்தனை ஆண்டாக தேடிக்கொண்டிருந்தேன் " என்று கேட்க அதற்கு அந்த மனைவி "அதை தான் நான் அடுத்த கூழ் காய்ச்சும்போது அடுப்பில் வைத்து எரித்து விட்டேனே? " என்றாள்...

வைத்தியர் நெஞ்சடைத்து மயங்கி சாய்ந்தார்...!!!

நீதி 1.பெண்டாட்டிக்கு தெரியாமல் எதுவும் செய்யக்கூடாது..

நீதி 2. அப்படி செஞ்சா பொண்டாட்டிக்கு தான் லாபம்..
நமக்கு எப்பவுமே அல்வா தான்..🙄
😀😃😄😁😆☺😊😇😝😜

20/03/2019

இலவசம்

ஒரு திருமண வரவேற்பில் மணமக்களுக்கு அன்பளிப்பும், அதனுடன் இணைந்த ஒரு கடிதம் வந்தது..!!
அதில் ஊரின் சிறந்த திரை அரங்கில், புதிய படத்துக்கான இரண்டு டிக்கெட்டுகள் இணைக்கப்பட்டிருந்தன..!!
மேலும், ''இதை அனுப்பியவர் யார் என்று கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்'' என்றொரு குறிப்பும் இருந்தது..!!

தம்பதிகள்இருவரும் எவ்வளவோ சிந்தித்துப் பார்த்தும் அவர்களால்
யார்..?? என்று கண்டு பிடிக்க முடியவில்லை..!!
இருந்தாலும் இலவசமாக வந்த டிக்கெட்டை எடுத்துக்கொண்டு இருவரும் அந்த திரைப்படத்தை குறிப்பிட்ட நாளில் பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினர்..!!
வீட்டை திறந்தவர்களுக்கு
ஒரே அதிர்ச்சி..!!
வீட்டிலிருந்த விலை உயர்ந்த பொருட்கள் எல்லாம் கொள்ளையடிக்கப் பட்டிருந்தன..!!
வீட்டில் ஒரு கடிதமும் இருந்தது அதில், "என்னா..?? படம் சூப்பரா..??" என்று எழுதியிருந்தது..!!
அவர்களது தேடலுக்கு பதில் கிடைத்தது..!!
"ஐயோ..!! களவாணிப்பயலா அவன்..??" என்று..!!

நீதி: ''இலவசம்'' யார் கொடுத்தாலும் அது கொள்ளை அடிப்பதற்கே..!!
உலகில் இலவசம் என்று எதுவும் இல்லை..!!
ஓட்டு போடும்போது -
சிந்திப்போம்......!
செயல்படுவோம்.......!

19/03/2019

பிரதிபலன்

🔥
🙏
படகு ஒன்றுக்கு பெயின்ட் அடிப்பதற்கான பொறுப்பு  ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவர் ப்ரஷ், பெயின்ட் என்பவற்றைக் கொண்டு வந்து படகு உரிமையாளர் வேண்டிக் கொண்டதைப் போலவே பிரகாசமான சிவப்பு நிறத்தில் பெயின்ட் அடித்துக் கொடுத்தார்.

பெயின்ட் அடித்துக் கொண்டிருக்கும் போது அந்தப் படகில் ஒரு சிறிய ஓட்டை இருப்பதை  கவனித்து, உடனடியாகவே அந்த ஓட்டையை சரிவர அடைத்தும் விட்டார்.

வேலை முடிந்ததும் அவர் தனக்குரிய கூலியை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார்.

அடுத்த நாள் படகின் உரிமையாளர் அந்த பெயின்டரின் வீடு தேடி வந்து ஒரு பெறுமதிபு மிக்க காசோலையை கொடுத்தார். அது அவர் ஏற்கனவே கூலியாக வழங்கிய தொகையைப் பார்க்கிலும் பன் மடங்கு அதிகமானது.

பெயின்டருக்கோ அதிர்ச்சி. " நீங்கள் தான் ஏற்கனவே பேசிய கூலியைத் தந்துவிட்டீர்களே? எதற்காக மீண்டும் இவ்வளவு பணம் தருகிறீர்கள்? என்று கேட்டார் பெயின்டர்.

அதற்கு உரிமையாளர் . இல்லை. இது பெயின்ட் அடித்ததற்கான கூலி அல்ல. படகில் இருந்த ஓட்டையை அடைத்ததற்கான பரிசு" என்றார் .

" இல்லை சார்... அது ஒரு சிறிய வேலை. அதற்காக இவ்வளவு பெரிய தொகைப் பணத்தை தருவதெல்லாம் நியாயமாகாது. தயவு செய்து காசோலையை கொண்டு செல்லுங்கள்" என்றார் பெயின்டர்.

" நண்பரே... உங்களுக்கு விசயம் புரியவில்லை. நடந்த விசயத்தைச் சொல்கிறேன் கேளுங்கள்" என்று சொல்லி விட்டு படகு உரிமையாளர் தொடர்ந்தார்.

" நான் உங்களை படகுக்கு பெயின்ட் அடிக்கச் சொல்லும் போது அதில் இருந்த ஓட்டை பற்றிச் சொல்ல மறத்துவிட்டேன்.

பெயின்ட் அடித்துவிட்டு நீங்களும் போய்விட்டீர்கள். அது காய்ந்த பிறகு எனது பிள்ளைகள் படகை எடுத்துக் கொண்டு மீன் பிடிக்கக் கிளம்பிவிட்டார்கள்.

படகில் ஓட்டை இருந்த விசயம் அவர்களுக்குத் தெரியாது. நான் அந்த நேரத்தில் அங்கு  இருக்கவுமில்லை.

நான் வந்து பார்த்த போது படகைக் காணவில்லை. படகில் ஓட்டை இருந்த விசயம் அப்போதுதான் நினைவுக்கு வர நான் பதறிப் போய்விட்டேன்.

கரையை நோக்கி ஓடினேன். ஆனால் எனது பிள்ளைகளோ மீன் பிடித்து விட்டு மகிழ்ச்சியாக திரும்பிவந்து கொண்டிருந்தார்கள். அந்தக் கணம் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கும் நிம்மதிக்கும் அளவேயில்லை.

உடனே படகில் ஏறி ஓட்டையைப் பார்த்தேன். அது நேர்த்தியாக அடைக்கப்பட்டிருந்தது. இப்போது சொல்லுங்கள். நீங்கள் செய்தது  சிறியதொரு வேலையா?  நீங்கள் என்னுடைய பிள்ளைகளின் விலைமதிக்க முடியாத உயிர்களையல்லவா காப்பாற்றியிருக்கிறீர்கள்?  உங்களது இந்தச் 'சிறிய' நற்செயலுக்காக நான் எவ்வளவுதான் பணம் தந்தாலும் ஈடாகாது." என்றார்.

இதிலிருந்து என்ன புரிகிறது. ​யாருக்கு எங்கே எப்போது எப்படி என்றெல்லாம் பார்க்க வேண்டியதில்லை. நமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பிரதிபலன் பாராது உதவுவோம். பிறரின் கண்ணீரைத் துடைப்போம். நம் கண் முன்னே தெரியும் ஓட்டைகளை கவனமாக அடைப்போம். அப்போதுதான் நமது ஓட்டைகளை அடைப்பதற்கான மனிதர்களை இறைவன் அறியாப் புறத்திலிருந்து நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பார்

🤝💪🌷

17/03/2019

திருவாசகம்

🙏🏻 _ஒருவர் தினமும் கோவிலுக்கு ""திருவாசகம்" கேட்பதற்காகச் சென்று வந்து கொண்டிருந்தார்_.

_*அதனால் வீட்டுக்கு வர கொஞ்சம் லேட் ஆகவும் ஆனது*_.

_அப்படி ஒரு இரவு அவர் வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தபோது வெறுப்பாகிப் போன அவரது மனைவி_,

_*"அப்படி என்ன தான் திருவாசகத்துலே கொட்டிக் கிடக்கு"*_......???

_"ஒரு நாளை போல இவ்வளவு லேட் ஆக வீட்டுக்கு திரும்பி வரேங்களே"_.

_*"டெயிலி அங்க போயிட்டு வாறீங்களே, உங்களுக்கு என்ன புரிந்தது சொல்லுங்க" என்று கேட்டார்*_.

அதற்கு அந்த மனிதர்.

" எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

_ஆனா, போயிட்டு கேட்டு வருவது நன்றாகவே இருக்கு" என்றார்_.

கோபமடைந்த மனைவி,

_*"முதல்ல வீட்டில இருக்கிற சல்லடையில் கொஞ்சம் தண்ணீர் வீட்டுக் கொண்டு வாங்க" என்றார்*_.

_அவரும் சல்லடையில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வீடு முழுதும் சிந்தியபடியே வந்தார்_.

_*மனைவியிடம் வந்த போது தண்ணீர் இல்லாமல் வெறும் சல்லடை மட்டுமே இருந்தது*_.

_மனைவி," தினமும் லேட்டா வரீங்க. கேட்டா_
_""திருவாசகத்துக்குப் போனேன் எங்கறீங்க"_......

_*"என்ன சொன்னாங்கன்னு கேட்டா"*_.....

_"ஒன்னும் தெரியல்லேன்னு சொல்லறீங்க"_.

"நீங்க ""திருவாசகம்"" கேட்கப்போற லட்சணம் இதோ இந்த சல்லடையில் ஊத்தின தண்ணீ மாதிரித் தான்"..

"எதுக்கும் பிரயோஜனம் கிடையாது", என்று கொட்டித் தீர்த்தாள்.

அதுக்கு அந்த மனிதர் சொன்ன பதில் தான் கதையின் நீதியாக அமைய போகிறது..

"நீ சொல்லறது சரிதான்"

"சல்லடையில் தண்ணீ வேணா நிரப்ப முடியாம போகலாம்".

"ஆனா, அழுக்கா இருந்த சல்லடை இப்போ பாரு.. நல்லா சுத்தமாயிடுச்சு". 

"அதுபோல,திருவாசக உபன்யாசத்தில சொல்ற விஷயம் வேணா எனக்குப் புரியாமலிருக்கலாம்".

_"ஆனா, என்னோட மனசில இருக்கிற அழுக்கையெல்லாம் படிப் படியாக அது அகற்றுவதை என்னால் நன்கு உணர முடிகிறது", ன்னு சொன்னார்"_.

புரிதலை விட தெளிதலே எப்பவும் முக்கியம்
                                                      -  சிவன்அடிமை

10/03/2019

👌Beautiful thoughts

⭕⭕⭕⭕⭕⭕⭕⭕
1. None can destroy iron, but its own rust can!  Likewise, none can destroy a person, but his own mindset can.
⭕⭕⭕⭕⭕⭕⭕⭕
2. Ups and downs in life are very important to keep us going, because a straight line even in an E.C.G. means we are not alive.
⭕⭕⭕⭕⭕⭕⭕⭕
3. The same Boiling Water that hardens the egg, Will Soften the Potato! It depends upon Individual's reaction To stressful circumstances!
⭕⭕⭕⭕⭕⭕⭕⭕
Beautiful saying : Mobile has taught us three things ....
1.Whatever makes you happy  -- save it.....
2.*Whatever makes others happy -- forward it.....
3.Whatever makes no one happy -- Delete it....
Stay healthy n b happy.🙏
⭕⭕⭕⭕⭕⭕⭕⭕

மன முதிர்ச்சி என்றால் என்ன?

What is Maturity of Mind ?

1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு
    நம்மை திருத்திக்கொள்வது.
1.Correcting ourselves without trying to correct others.

2. அனைவரையும் அப்படியே (குறைகளுடன்)
    ஏற்றுக்கொள்வது.
2. Accepting others with their short comings.

3. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள்
     கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல்.
3. Understanding the opinions of others from their perspectives.

4. எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல்.
4. Learning to leave what are to be avoided.

5. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல்.
5. Leaving the expectations from others.

6. செய்வதை மன அமைதியுடன் செய்வது.
6. Doing whatever we do with peace of mind.

7. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம்
    நிரூபிப்பதை விடுவது.
7. Avoiding to prove our intelligence on others.

8. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும்
என்ற நிலையை விடுதல்.
8. Avoiding the status that others should accept our actions.

9. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல்.
9. Avoiding the comparisons of ourselves with others.

10. எதற்குமே சஞ்சலப்படாமல் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சித்தல்..
10. Trying to keep our peace in our mind
      without worrying for anything.

11. நம் அடிப்படை தேவைக்கும், நாம் அடைய
    விரும்புவற்றிற்கும் உள்ள வேறுபாட்டினை உணர்தல்.
11. Understanding the difference between the basic needs
      and what we want.

12. சந்தோசம் என்பது பொருள் சம்பந்தப்பட்டது அல்ல
     என்ற நிலையை அடைதல்.
12. Reaching the status that happiness is not connected. with material things.

இந்த 12 ல் குறைந்தது ஒரு ஏழெட்டையாவது கடைபிடிக்க முயற்சித்தால் வாழ்க்கை எளிதாகிவிடும்.*
* Our life will be simple if only we practice 7 or 8 of the above 12.

Live your Life & Love your Life.

குடும்ப நல ஆலோசனைகள்

குடும்ப நல வழக்குகளைக் கையாண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வழங்கும் முக்கிய பத்து கட்டளைகள் (ஆலோசனைகள்)

1) உங்கள் மகன் மற்றும் மருமகளை உங்களோடு ஒரே வீட்டில் இருக்க நிர்ப்பந்திக்க வேண்டாம்.
வாடகை வீட்டிலாவது தனியாக குடியிருக்கச் செய்யுங்கள்.
தங்களுக்கென்று ஒரு குடியிருப்பை தேடிக் கொள்வதற்கு அவர்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது.
உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் எவ்வளவு இடைவெளி ஏற்படுத்துகிறீர்களோ அவ்வளவு பிரச்சனைகளை உங்கள் மருமக்களோடு தவிர்க்கலாம்.

2) உங்கள் மருமகளை உங்கள் மகள் போல பார்த்துக் கொள்ள வேண்டாம்.
உங்கள் மகனின் மனைவியாகவே நினைத்துக் கொள்ளுங்கள்.
அல்லது அவளை ஒரு தோழியாக பாருங்கள்.
உங்கள் மகன் உங்களுக்கு கீழ்ப்பட்டவன் என்று நினைப்பது போல் அவன் மனைவியும் உங்களுக்கு கீழ்ப்பட்டவள் என்று நினைத்து திட்டி விடாதீர்கள்.
ஏனென்றால் அவள் காலத்திற்கும் அதை நினைவில் வைத்திருப்பாள்.
தன்னை திட்டுவதற்கும்,
சரிப்படுத்துவதற்கும் தன்னுடைய தாயாருக்கே அன்றி வேறொருவருக்கும் உரிமையில்லை என்று எண்ணுவாள்.

3) உங்கள் மகனின் மனைவி எப்படிப்பட்ட பழக்கவழக்கம் மற்றும் குணமுடையவராயிருந்தாலும் அது உங்களை பாதிக்க வேண்டாம்.
அது முற்றிலும் உங்கள் மகனின் பிரச்சனை.
உங்கள் மகன் முதிர்ந்தவனாகவும்,மனப்பக்குவமுள்ளவனாகவும் இருப்பதால் இதை உங்கள் பிரச்சினையாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

4) சில சமயம் கூட்டாக வாழும் போது வீட்டு வேலைகளை குறித்து தெளிவுப்படுத்திக் கொள்ளுங்கள்.
நீங்கள் அவர்கள் துணிகளைத் துவைப்பதற்கும் அவர்கள் குழந்தைகளுக்கு தொட்டில் கட்டுவதற்கும் எந்த அவசியமும் இல்லை.
உங்கள் மருமகள் உங்களிடம் உதவி கேட்டால் உங்களால் முடிந்தால் செய்து கொடுங்கள்.பதிலுக்கு எந்த நன்றியையும் எதிர்பாராதிருங்கள். மேலும் உங்கள் மகனின் குடும்பத்தைக் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம்.அவர்கள் பிரச்சனைகளை அவர்களே தீர்த்துக் கொள்வார்கள்.

5)உங்கள் மகன் மற்றும் மருமகள் சண்டையிடும் போது காது கேளாதோர் போல் இருந்து கொள்ளுங்கள்.இளம் தம்பதியர் தங்கள் பிரச்சனைகளில் பெற்றோர் தலையிடுவதை விரும்புவதில்லை.

6)உங்கள் பேரக்குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல என்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.குழந்தைகளை எவ்விதம் வளர்க்க வேண்டும் என்பது உங்கள் பிள்ளைகளை பொறுத்த ஒன்று.நற்பெயரோ அவப்பெயரோ அது உங்கள் பிள்ளைகளையே சாரும்.

7) உங்கள் மருமகள் உங்களை கவனிக்கவும் நேசிக்கவும் அவசியமில்லை.அது உங்கள் மகனின் கடமை.இதை உங்கள் மகனுக்கு நீங்கள் புரிய வைத்திருப்பீர்களானால் உங்களுக்கும் உங்கள் மருமகளுக்கும் நல்ல உறவு அமையும்.

8) நீங்கள் பணி ஓய்வு பெற்ற பின் உங்கள் பிள்ளைகளை சார்ந்து கொள்ளாதீர்கள்.உங்கள் காரியங்களை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.உங்கள் வாழ்வில் நீங்கள் கடந்து வந்த பாதைகளை தனியே சமாளித்த உங்களால் இனி வரும் காலத்தையும் பார்த்துக் கொள்ள முடியும்.
இன்னும் புதிய அனுபவங்கள் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கும்.

9)உங்கள் பணி ஓய்வு காலத்தை சந்தோஷமாக வாழுங்கள்.
நீங்கள் சம்பாதித்த உங்கள் பணத்தை உங்கள் நலனுக்காக செலவு
செய்யுங்கள்.
உங்கள் மகனிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்து விட வேண்டாம்.
இறுதியில் உங்கள் பணம் உங்களுக்கு பயனில்லாமல் போவதற்கு வாய்ப்பு உள்ளது

10)உங்கள் பேரக்குழந்தைகள் உங்கள் சொத்தல்ல...
அது உங்கள் பிள்ளைகளின் விலையேறப்பெற்ற பரிசு என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

குறிப்பு:
இந்த பத்து கட்டளைகள் நீங்கள் வாசிப்பதற்கு மட்டுமல்ல,
உங்கள் நண்பர்கள்,
சொந்தங்கள், பெற்றோர்கள்,
பிள்ளைகள்,
கணவன் மற்றும் மனைவி எல்லோருக்கும் பகிருங்கள்.... எல்லோரும் வாழ்வில் அமைதியும் முன்னேற்றமும் பெறுவதற்கான வாழ்க்கைப் பாடமே இவைகள்...!